மோடியை விமர்சனம் செய்த சத்தீஷ்கார் முதல்-மந்திரிக்கு மூக்கு கண்ணாடி அனுப்பி வைப்பு
பிரதமர் நரேந்திர மோடியை விமர்சனம் செய்த சத்தீஷ்கார் முதல்-மந்திரி பூபேஷ்பாலுக்கு பா.ஜ.க. நிர்வாகி பாண்டியராஜ் புதுக்கோட்டை தலைமை தபால் நிலையத்தில் இருந்து ஒரு கடிதம் மற்றும் மூக்கு கண்ணாடியை நேற்று அனுப்பி வைத்தார்.
புதுக்கோட்டை,
பிரதமர் நரேந்திர மோடியை விமர்சனம் செய்த சத்தீஷ்கார் முதல்-மந்திரி பூபேஷ்பாலுக்கு பா.ஜ.க. நிர்வாகி பாண்டியராஜ் புதுக்கோட்டை தலைமை தபால் நிலையத்தில் இருந்து ஒரு கடிதம் மற்றும் மூக்கு கண்ணாடியை நேற்று அனுப்பி வைத்தார். அவர் அனுப்பிய கடிதத்தில், பிரதமர் நரேந்திர மோடிக்கு நீங்கள் முகம் பார்க்கும் கண்ணாடியை அனுப்பி வைத்தீர்கள் என்ற தகவல் எனக்கு கிடைத்தது. அதற்கு பரிசாக மூக்கு கண்ணாடியை அனுப்பி உள்ளேன். எளியவனின் பரிசை பெற்றுக்கொள்வீர்கள் என நம்புகிறேன். ஏனென்றால் கடந்த 15 ஆண்டுகளாக நீங்கள் ஆட்சியில் இல்லாமல் இருந்த நிலையில், தற்போது அடைந்திருக்கும் முதல்-மந்திரி பதவியால் உங்களுடைய பரபரப்பான சூழ்நிலையால் உங்களது மூக்கு கண்ணாடியை சோதனை செய்து அணியவில்லை என தெரிகிறது. நீங்கள் பிரதமர் மோடிக்கு அனுப்பிய பரிசில் இந்திய மக்கள் சுயரூபத்தை தேர்தலில் காட்ட தயாராகி கொண்டிருக்கின்றனர். உங்களது முகத்தை நீங்கள் பார்த்து கொள்ளுங்கள் என்று ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியை அனுப்பி உள்ளர்கள். இப்போதைய சூழ்நிலையில் நரேந்திர மோடி இந்தியாவின் முகமாக மாறி உள்ளதை நான் தெரிவித்து கொள்கிறேன். நாங்கள் இந்தியர்கள். இந்தியரை ஆதரிப்போம். உங்களை போன்ற பதவி சுகத்திற்காக இத்தாலி வாரிசுகளை ஆதரிக்க நாங்கள் தேச துரோகிகள் அல்ல. தேசத்தை நேசிக்கும் ஆர்.எஸ்.எஸ். வழியில் வந்தவர்கள். இந்த மூக்கு கண்ணாடியை அணிந்து இந்தியர்களை காணுங்கள், காணுமிடம் எல்லாம் மோடியாக தெரியும் என கூறியிருந்தார்.