அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து கரூர், பெரம்பலூர், அரியலூர் பகுதிகளில் நாளை எடப்பாடி பழனிசாமி பிரசாரம்
அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து கரூர், பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட இடங்களில் தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள வருகை தர உள்ளார்.;
பெரம்பலூர்,
தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதிக்கும் வருகிற 18-ந் தேதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகள் தங்களது தோழமை கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.
அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தம்பிதுரை-சிவபதி- சந்திரசேகரை ஆதரித்து...
இந்த நிலையில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கரூர், பெரம்பலூர், சிதம்பரம் (தனி) ஆகிய 3 நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து நாளை (புதன் கிழமை) பிரசாரம் செய்ய அந்தந்த பகுதிகளுக்கு வருகை தரஉள்ளார். இதற்காக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை காலை 7.30 மணிக்கு சேலத்தில் இருந்து கார் மூலம் கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையத்திற்கு காலை 8.15 மணிக்கு வந்தடைகிறார். பின்னர் அங்கு கரூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் தம்பிதுரையை ஆதரித்து வேலாயுதம்பாளையம், அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம் ஆகிய இடங்களில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்த வேனில் நின்றவாறு பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்து பேசுகிறார்.
பின்னர் எடப்பாடி பழனிசாமி காலை 10 மணியளவில் கரூர் மாவட்டம், குளித்தலையில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் என்.ஆர்.சிவபதியை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். இதையடுத்து சிவபதியை ஆதரித்து காலை 10.20 மணிக்கு திருச்சி மாவட்டம் முசிறி, 11 மணிக்கு துறையூர், 11.45 மணிக்கு மண்ணச்சநல்லூர் ஆகிய பகுதிகளிலும் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்கிறார். அதனை தொடர்ந்து மதியம் 12.45 மணியளவில் பெரம்பலூருக்கு வரும் அவர், அங்கும் அ.தி.மு.க. வேட்பாளர் சிவபதியை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். இதையடுத்து பெரம்பலூரில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மதியம் உணவு சாப்பிட்டு விட்டு சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார். பின்னர் மாலை 3.30 மணியளவில் எடப்பாடி பழனிசாமி பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சந்திரசேகரனை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளார்.
இதனை தொடர்ந்து மாலை 4 மணிக்கு அரியலூரிலும், 4.30 மணிக்கு அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்திலும் திறந்த வேனில் நின்றவாறு வேட்பாளர் சந்திரசேகரனை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளார். பின்னர் அங்கிருந்து விருத்தாசலத்திற்கு பிரசாரத்திற்கு செல்கிறார். மேற்கண்ட தகவல் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள தமிழக முதல்-அமைச்சர் தேர்தல் பிரசார சுற்றுப்பயண குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்- அமைச்சரின் பிரசாரத்திற்கான ஏற்பாடுகளை கரூர், பெரம்பலூர், சிதம்பரம் ஆகிய நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. கட்சியினர் செய்து வருகின்றனர். முதல்-அமைச்சர் வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.