‘நாடாளுமன்ற தேர்தலில் கதாநாயகன் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை’ பொதுக்கூட்டத்தில் கே.எஸ்.அழகிரி பேச்சு
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை கதாநாயகனாக விளங்குவதாக கே.எஸ். அழகிரி கூறினார்.
கருங்கல்,
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தேர்தல் பிரசார கூட்டம் கருங்கல் சந்தை திடலில் நடந்தது. குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் மனோதங்கராஜ், விஜயதரணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர்களாக காங்கிரஸ் தேசிய செயலாளர் சஞ்சய் தத், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோர் கலந்து கொண்டு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் எச். வசந்தகுமாரை ஆதரித்து வாக்கு சேகரித்தனர். கூட்டத்தில் கே.எஸ்.அழகிரி பேசும்போது கூறியதாவது:-
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் கதாநாயகன் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை. ஏழைகளுக்கு மாதம்தோறும் ரூ. 6 ஆயிரம் வழங்கப்படும் என்றும், அந்த தொகை பெண்களின் பெயரிலேயே வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. உலகத்திலேயே இவ்வளவு பெரிய சமூக நலத்திட்டம் வேறு எந்த நாட்டிலும் அறிவிக்கப்படவில்லை, நிறைவேற்றப்படவில்லை. 100 நாள் வேலை திட்டம் என்பது 15 கோடி இந்திய மக்களை வறுமை கோட்டில் கீழ் இருந்து வெளியே கொண்டு வந்தது.
இன்றைக்கு மாதம் ரூ.6 ஆயிரம் திட்டத்தை கொண்டு வந்துள்ளோம். இந்த பணம் அனைவருக்கும் வழங்கப்படாது. வறுமை கோட்டிற்கு கீழ் இருப்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். 100 நாள் வேலை திட்டம் கிராமங்களுக்கு மட்டுமே பொருந்தும். ஆனால், இந்த திட்டம் இந்தியா முழுவதும் பொதுவானது. பா.ஜனதாவை சேர்ந்தவர்கள் கேட்கிறார்கள் பணம் எங்கே இருக்கிறது. காங்கிரஸ் பொய் சொல்கிறது. இது சாத்தியம்இல்லை என்று கூறுகிறார்கள். நடைமுறையில் சாத்தியம் இல்லாத எதையும் காங்கிரஸ் சொல்லாது.
மோடி பணமதிப்பு இழப்பு நடவடிக்கை கொண்டு வந்த போது, அது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கூறினார். அதுபோல், இந்த பொருளாதார வளர்ச்சி 1½ சதவீதம் குறைந்தது. சிறு தொழில் பாதிக்கப்பட்டது.
நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதி வேட்பாளர் எச். வசந்தகுமார் இந்தியாவிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற அனைவரும் உழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் வேட்பாளர் வசந்தகுமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் செல்லசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. லீமாரோஸ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, திக்கணங்கோடு பகுதியில் நடந்த விழாவில் தமிழ்மாநில காங்கிரஸ் குமரி மேற்கு மாவட்ட தலைவர் டாக்டர் பினுலால் சிங் தலைமையில் நூற்றுக்கணக்கானோர் காங்கிரஸ் தேசிய செயலாளர் சஞ்சய் தத், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தனர். இந்த நிகழ்ச்சியில், காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.