கோவில் பூட்டை உடைத்து விநாயகர் சிலையை திருட முயற்சி 3 பேர் கைது

கீழ்வேளூர் அருகே கோவில் பூட்டை உடைத்து விநாயகர் சிலையை திருட முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2019-04-08 03:45 IST
கீழ்வேளூர்,

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே நீலப்பாடி மெயின் சாலையில் விநாயகர் கோவில் அமைந்துள்ளது. சம்பவத்தன்று இந்த கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை அந்த வழியாக சென்ற கிராம மக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது 3 பேர் விநாயகர் சிலையை திருட முயன்றுள்ளனர். கிராம மக்கள் வருவதை பார்த்த 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினர். அவர்களை, கிராம மக்கள் விரட்டி பிடித்து கீழ்வேளூர் போலீசில் ஒப்படைத்தனர்.

இதை தொடர்ந்து 3 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் நாகையை அடுத்த மேலக்குறிச்சி காலனி தெருவை சேர்ந்த சூர்யபிரகாஷ் (வயது 24), தமிழ்தாசன் (27), முருகதாஸ் (34) ஆகியோர் என்பது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்