தஞ்சை மாவட்டத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 2-ம் கட்ட பயிற்சி தபால் மூலம் வாக்குகளையும் பதிவு செய்தனர்
வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 2-ம் கட்ட பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது. அப்போது அலுவலர்கள் தபால் மூலம் தங்களது வாக்குகளையும் பதிவு செய்தனர்.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் வாக்குச்சாவடி அலுவலர்களாக பணியாற்றுவதற்கு தஞ்சை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் 11,780 ஆசிரியர்கள், பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் ஆகியோருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
அவ்வாறு பணி நியமன ஆணை வழங்கப்பட்டவர்களுக்கு முதல் கட்ட பயிற்சி வகுப்பு கடந்த மாதம் 24-ந்தேதி நடைபெற்றது. நேற்று 2-வது கட்ட பயிற்சி வகுப்பு தஞ்சை மாவட்டத்தில் 8 இடங்களில் நடைபெற்றது.
தஞ்சை மன்னர் சரபோஜி கல்லூரியில் நடைபெற்ற பயிற்சி வகுப்பினை தேர்தல் பார்வையாளர்கள் ஜெகதீஸ்வர், நரேந்திரசங்கர் பாண்டே மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான அண்ணாதுரை ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அலுவலர்களுக்கு விளக்கினர்.
மேலும் மாதிரி வாக்கு பதிவில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், பெண் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு தேவையான முன்னேற்பாடுகள், வாக்குச்சாவடி மையத்திற்கு அரசியல் கட்சி முகவர்கள் வரவில்லையெனில் செய்ய வேண்டியவை, வாக்குச்சாவடி மையத்தில் உறுதி செய்யப்படவேண்டிய அடிப்படை வசதிகள் ஆகியவை குறித்து வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு விவரிக்கப்பட்டது.
மன்னர் சரபோஜி கல்லூரியில் தபால் வாக்குகள் செலுத்தும் இடம், தபால் வாக்குகள் பணிக்கு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் மற்றும் மாதிரி வாக்குச்சாவடி மையத்தினை அவர்கள் பார்வையிட்டனர். அப்போது தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் உடன் இருந்தார்.
பின்னர் மன்னார்குடி மற்றும் பட்டுக்கோட்டையில் நடைபெற்ற வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான 2-ம் கட்ட பயிற்சி வகுப்பினை கலெக்டர் அண்ணாதுரை பார்வையிட்டார். அப்போது மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் புண்ணியகோடி, பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பூங்கோதை ஆகியோர் உடனிருந்தனர்.
வாக்குச்சாவடி அலுவலர்கள் தங்கள் வாக்கினை தபால் மூலம் செலுத்துவதற்காக பயிற்சி மையங்களில் தபால் வாக்குப்பெட்டி வைக்கப்பட்டு இருந்தது. அதில் வாக்குச்சாவடி அலுவலர்கள் தங்களது தபால் வாக்கினை செலுத்தினர்.