தி.மு.க. தேர்தல் அறிக்கை எதிர்க்கட்சிகளுக்கு பயத்தை உருவாக்கி உள்ளது உதயநிதி ஸ்டாலின் பேச்சு
தி.மு.க. தேர்தல் அறிக்கை எதிர்க்கட்சிகளுக்கு பயத்தை உருவாக்கி உள்ளது என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
பூந்தமல்லி,
கடந்த 5 ஆண்டுகளாக பிரதமர் மோடி மக்களுக்கு எந்தவொரு நன்மையும் செய்யவில்லை. ‘நீட்’ தேர்வால் அனிதா இறந்தார். தூத்துக்குடி பகுதியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக அமைதியாக போராடிய 13 பேரை சுட்டுக்கொன்றனர்.
‘நீட்’ தேர்வு ரத்து செய்யப்படும் என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் கூறினார். தற்போது ராகுல்காந்தியும் சொல்லிவிட்டார். கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படும்.
பா.ஜ.க, அ.தி.மு.க. ஆட்சி தொடர்ந்தால் ரேஷன் கடைகள் மூடப்படும். ஆனால் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும். நாளைக்கே 5 பவுன் நகையை அடகு வைத்து கடன் வாங்கி கொள்ளுங்கள். வரப்போவது நமது ஆட்சி தான். கிண்டி கத்திப்பாரா, தாம்பரம், பல்லாவரம் போன்ற பகுதிகளில் கட்டப்பட்ட பாலங் கள், நமது ஆட்சி காலத்தில் வேட்பாளர் டி.ஆர்.பாலு கட்டிகொடுத்தது.
தி.மு.க. தேர்தல் அறிக்கை எதிர்க்கட்சிகளுக்கு பயத்தை உருவாக்கி உள்ளது. நான் அன்புமணி ராமதாசை திட்டவில்லை, விவாதத்திற்கு என்னை அழைத்தார், விவாதத்திற்கு தயார் என்று கூறினேன்.
முதலில் சேலம் 8 வழி சாலை பற்றி விவாதம் செய்ய தயார். அமைச்சர்கள் ஊழல் குறித்து கவர்னரிடம் மனு அளித்துவிட்டு அங்கேயே கூட்டணி வைத்துள்ளார். கோடநாடு கொலை வழக்கில் காவலாளி, கார் டிரைவர் என அடுத்தடுத்து 5 பேர் இறந்துள்ளனர்.
குற்றவாளிகளை கண்டுபிடியுங்கள் என்று கூறினால் தேர்தல் வரை பேசக்கூடாது என்று கூறுகின்றனர். கோடநாடு கொலை பற்றி அனைவரும் பேச வேண்டும். அப்போது தான் உண்மை குற்றவாளிகள் தெரியவரும். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து மாங்காடு, குன்றத்தூர், தாம்பரம், பெருங்களத்தூரில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் திறந்த வேனில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-