வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 2–ம் கட்ட பயிற்சி கலெக்டர் தொடங்கி வைத்தார்
வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 2–ம் கட்ட பயிற்சியை கலெக்டர் பிரசாந்த் வடநேரே தொடங்கி வைத்தார்.
நாகர்கோவில்,
நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெற உள்ளது. குளச்சல் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்குப்பதிவு பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் உள்ளிட்ட 1200 பேருக்கு இரண்டாம் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பு நாகர்கோவிலை அடுத்த சுங்கான்கடையில் உள்ள புனித சேவியர் கத்தோலிக்க பொறியியல் கல்லூரியில் நேற்று நடைபெற்றது.
மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான பிரசாந்த் வடநேரே பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
உலக அளவில் 80 கோடி வாக்காளர்களை கொண்ட நமது இந்திய நாட்டில் தேர்தல் மிகச்சிறப்பாக நடைபெறுகிறது. இந்தியாவில் நடைபெறும் இந்த தேர்தலை ஜனநாயக திருவிழா என்று அழைக்கிறார்கள். வாக்களிப்பது நமக்கு எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு தேர்தல் பணியில் ஈடுபடுவதும், வாக்காளர்கள் அனைவரையும் வாக்களிக்க செய்வதும் முக்கிய கடமையாகும்.
ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள ஒட்டுமொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையினை விட நமது இந்திய நாட்டில் அதிக அளவு வாக்காளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து பணியாளர்களும் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள விதிமுறைகளை முழுமையாக படித்து, புரிந்து கொள்ள வேண்டும். வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் அதனை உடனடியாக பயிற்சி வழங்கும் அலுவலர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.
நீங்கள் அனைவரும் ஏற்கனவே நடைபெற்ற பல்வேறு தேர்தல்களில் பணியாற்றி இருந்தாலும், தற்போது நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் புதிய விதிமுறைகள் பின்பற்றப்படுவதை நீங்கள் அனைவரும் அறிந்து வைத்திருக்க வேண்டும். வாக்குப்பதிவு மையங்களில் பயன்படுத்தப்படும் வி.வி.பேட் (யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதிப்படுத்தும்) கருவிகள் போன்றவை தற்போது பயன்படுத்துவது குறித்து அனைவரும் அறிந்து வைத்திருக்க வேண்டும். வாக்குப்பதிவு நாளில் தேர்தல் விதிமுறைகளை பின்பற்றி எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது குறித்தும், ஒவ்வொரு அலுவலர்களும் மேற்கொள்ளும் பணிகள் குறித்தும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை கையாள்வது குறித்தும், வி.வி.பேட் கருவியின் செயல்பாடுகள் குறித்தும் பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
இதேபோல் கன்னியாகுமரி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட 1,240 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு ஆசாரிபள்ளம் பெல்பீல்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், நாகர்கோவில் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட 1,100 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு அல்போன்சா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும் நடந்தது. பத்மநாபபுரம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட 1,080 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு திருவட்டார் எக்சல் குளோபல் பள்ளியிலும், விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட 1,084 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு மார்த்தாண்டம் சேக்ரட் ஹார்ட் இண்டர்நேசனல் மேல்நிலைப்பள்ளியிலும், கிள்ளியூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட 1,072 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு கருங்கல் பெத்தலகேம் மேல்நிலைப்பள்ளியிலும் மண்டல அலுவலர்கள் மூலம் தேர்தல் பயிற்சி வகுப்பு நடந்தது.
இவ்வாறு கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறினார்.
பயிற்சி வகுப்பில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கிறிஸ்டோபர் ஜெயராஜ் (குளச்சல்), ராஜாசிங் (கல்குளம்), கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) பத்ஹூ முகம்மது நசீர் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.