விபத்தில் பலியான விஞ்ஞானியின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி இழப்பீடு நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு

விபத்தில் பலியான விஞ்ஞானியின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

Update: 2019-04-04 22:15 GMT
நாகர்கோவில்,

நாகர்கோவில் கிறிஸ்து நகரை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 51). இவர் காவல்கிணற்றில் உள்ள மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் விஞ்ஞானியாகவும், என்ஜினீயராகவும் பணியாற்றினார். கடந்த 24-10-2015 அன்று கார்த்திக் தனது மோட்டார் சைக்கிளில் உறவினரை பார்ப்பதற்காக நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் பகுதியில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிரே மினி லாரி ஒன்று காய்கறி ஏற்றி கொண்டு வேகமாக வந்தது. இதனை கண்டதும் கார்த்திக் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். ஆனால் கண்ணிமைக்கும நேரத்தில் மினிலாரி, மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கார்த்திக் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிர் இழந்தார். இந்த விபத்து தொடர்பாக நாகர்கோவில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே விபத்தில் இறந்த கார்த்திக்கின் மனைவி லதா இழப்பீடு கேட்டு நாகர்கோவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நாகர்கோவிலில் உள்ள மாவட்ட தலைமை குற்றவியல் கோர்ட்டில் நடந்து வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி பாண்டியராஜன் நேற்று தீர்ப்பு கூறினார். தீர்ப்பில், விபத்தில் இறந்த கார்த்திக்கின் குடும்பத்தினருக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் இழப்பீட்டு தொகையாக ரூ.1 கோடியே 18 லட்சத்து 78 ஆயிரத்தை 30 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஆ.அழகேசன் ஆஜராகி வாதாடினார்.

மேலும் செய்திகள்