பெண் தூக்குப்போட்டு தற்கொலை கணவரை கைது செய்து விசாரணை

கணவன்- மனைவி இருவருக்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த ரம்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-04-04 22:15 GMT
வரதராஜன்பேட்டை,

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே உள்ள அழகாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மனைவி ரம்யா. கணவன்- மனைவி இருவருக்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த ரம்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த ஆண்டிமடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரம்யா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து ரம்யாவின் தாய் மல்லிகா ரம்யா சாவில் மர்மம் இருப்பதாக ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்