நெல்லை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டசபை தொகுதிகளுக்கும் தேவையான வசதிகளை செய்து தருவேன் தி.மு.க. வேட்பாளர் ஞானதிரவியம் வாக்குறுதி
நெல்லை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டசபை தொகுதிகளுக்கும் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருவேன் என்று தி.மு.க. வேட்பாளர் ஞானதிரவியம் வாக்குறுதி அளித்துள்ளார்.
திசையன்விளை,
நெல்லை நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடந்தது. தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் தலைமை தாங்கி, தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார். இதில் வேட்பாளர் ஞானதிரவியம், முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு, மாவட்ட காங்கிரஸ் தலைவர் சிவக்குமார், துணைத்தலைவர் விஜயபெருமாள், மாவட்ட ம.தி.மு.க. பொருளாளர் ரைமண்ட், தி.மு.க. ஒன்றிய இளைஞரணி முன்னாள் செயலாளர் அனிதா பிரின்ஸ், மாவட்ட தொண்டரணி செயலாளர் தனபால், ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் ஜெகதீஸ், நகர தி.மு.க. செயலாளர் டிம்பர் செல்வராஜ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் வேட்பாளர் ஞானதிரவியம் பேசியதாவது:-
தி.மு.க.வின் சாதாரண தொண்டரான என்னை தலைவர் மு.க.ஸ்டாலின் வேட்பாளராக நிறுத்தியுள்ளார். இப்போது நடைபெறும் தேர்தல் தி.மு.க.விற்கு எழுச்சியை ஏற்படுத்தும். நான் என்றும் உங்கள் தொண்டன். என்னை வெற்றி பெற செய்தால் நெல்லை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருவேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
நெல்லை நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. தலைமை தேர்தல் அலுவலகத்தில் நேற்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில், மராட்டிய மாநில அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ராமராஜா, கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார். அப்போது கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.