பெரிய கோவில் தேரோட்டம்: தஞ்சை மாவட்டத்தில் 16-ந் தேதி உள்ளூர் விடுமுறை கலெக்டர் தகவல்
பெரிய கோவில் தேரோட்டத்தையொட்டி தஞ்சை மாவட்டத்தில் 16-ந் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக கலெக்டர் அண்ணாதுரை கூறி உள்ளார்.
தஞ்சாவூர்,
தஞ்சை பெரிய கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவில் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதோடு, உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வருகிறது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 16-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அன்று தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் விடுமுறை
இது குறித்து தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை பெரியகோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு வருகிற 16-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும், பள்ளிகள், கல்லூரிகளில் நடைபெறும் தேர்வுகள் மற்றும் இதர முக்கிய தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
இந்த உள்ளூர் விடுமுறை நாளுக்கு பதிலாக வருகிற 27-ந்தேதி (சனிக்கிழமை) தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும், பள்ளி, கல்லூரிகளுக்கும் பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறை செலாவணி முறிச்சட்டத்தின் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால் தஞ்சை மாவட்ட கருவூலம் மற்றும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளை கருவூலங்களும் குறிப்பிட்ட பணியாளர்களுடன் இயங்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.