இலங்கையில் இருந்து சென்னைக்கு கடத்தல் விமான நிலையத்தில் ரூ.14 லட்சம் தங்கம் பறிமுதல் 2 வாலிபர்கள் சிக்கினர்
இலங்கையில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு கடத்திவரப்பட்ட ரூ.14 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 வாலிபர்கள் சிக்கினர்.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி கொண்டுவரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து விமானத்தில் வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர்.
அப்போது இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து சென்னைக்கு விமானம் வந்தது. அதில் பயணம் செய்த இலங்கையை சேர்ந்த அபுதாகீர் (வயது 30), சென்னையை சேர்ந்த அசாருதீன் (30) ஆகியோரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரணை நடத்தினார்கள். 2 பேரின் உடைமைகளை சோதனை செய்தனர்.
ஆனால் உடைமைகளில் எதுவும் இல்லை. பின்னர் தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அப்போது இருவரும் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து 2 பேரிடம் இருந்தும் ரூ.14 லட்சம் மதிப்புள்ள 420 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இலங்கை வாலிபர் உள்பட 2 பேரிடமும் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.