வேப்பனப்பள்ளி, பர்கூரில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு

வேப்பனப்பள்ளி, பர்கூரில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளில் தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு மேற்கொண்டார்.;

Update: 2019-04-04 22:45 GMT
வேப்பனப்பள்ளி, 

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி மற்றும் பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பதற்றமான வாக்குச்சாவடிகள், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கும் பாதுகாப்பு அறைகளை தேர்தல் பொது பார்வையாளர் ராம்ராவ் போன்ஸ்லே நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

முன்னதாக சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும். வி.வி.பேட் எந்திரங்கள் வைக்கப்பட உள்ள பாதுகாப்பு அறையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் அவர் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து பொதுமக்களிடம் கலந்துரையாடி அனைத்து வாக்காளர்களும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்த ஆய்வின் போது உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் குணசேகரன், அமீர்பாஷா, தாசில்தார்கள் வெங்கடேசன், சேகர், கோபி, துணை தாசில்தார்கள் செந்தில், விஜயகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் ரங்கராஜன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்