கரூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தினை அதிகாரி ஆய்வு

கரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு எந்திரங்கள் பிரித்து அனுப்பப்பட்டுள்ளன.

Update: 2019-04-03 22:45 GMT
கரூர்,

நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 18-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி கரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு எந்திரங்கள் பிரித்து அனுப்பப்பட்டுள்ளன. மேலும் தேர்தலுக்கு பிறகு மே மாதம் 23-ந்தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடத்துவதற்காக, கரூர் அருகே தளவாப்பாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை நேற்று, துணை தேர்தல் நடத்தும் அதிகாரியும், மாவட்ட வருவாய் அதிகாரியுமான சூர்யபிரகாஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது வாக்கு எண்ணும் மையத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள கட்டடத்தில் எந்தெந்த சட்டமன்றத்தொகுதிக்கு எந்தெந்த தளங்களில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்படவுள்ளது என்பது குறித்தும், மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் துணை தேர்தல் நடத்தும் அதிகாரி, காவல்துறை உயர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். செய்தியாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஊடக மையம் குறித்தும் அங்கு மேற்கொள்ளப்படவேண்டிய வசதிகள் குறித்தும், சட்மன்ற தொகுதிவாரியாக வாக்கு எண்ணும் அறைகளில் மேற்கொள்ளப்படவேண்டிய முன்னேற்பாட்டு பணிகள் குறித்தும் துணை தேர்தல் நடத்தும் அதிகாரி விரிவாக ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாரதி, கரூர் வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, உதவி ஆணையர்(தணிக்கை) ராஜவேல், துணை போலீஸ் சூப்பிரண்டு (ஆயுதப்படை) சிற்றரசு, அரவக்குறிச்சி சட்டமன்றத்தொகுதிக்கான உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி மீனாட்சி, மண்மங்கலம் வட்டாட்சியர் ரவிக்குமார் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்