திருவொற்றியூரில் கொடி கம்பத்தை அகற்ற எதிர்ப்பு; காங்கிரசார் போராட்டம்

திருவொற்றியூரில் கொடி கம்பத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update:2019-04-04 04:15 IST

திருவொற்றியூர்,

சென்னை ஐகோர்ட்டு உத்தரவுபடி திருவொற்றியூர் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கட்சி கொடி கம்பங்களை அகற்றும்பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி திருவொற்றியூர் தேரடி சன்னதி தெருவில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பு உள்ள கட்சி கொடி கம்பத்தை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நேற்று வந்தனர்.

இதனை அறிந்த காங்கிரஸ் தொண்டர்கள் கட்சி அலுவலகம் முன்பு திரண்டனர். பின்னர் அனைவரும் கொடி கம்பத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கோ‌ஷங்கள் எழுப்பினர்.

கொடி கம்பத்தில் காங்கிரசை பிரதிபலிக்கும் வகையில் நிறம் எதுவும் இல்லை என்று கூறி சன்னதி தெருவில் சாலை மறியலில் ஈடுபட கட்சியினர் முயன்றனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மாநகராட்சி அதிகாரிகளிடம் பேசி தீர்வு காண்பதாக உறுதி அளித்தனர். இதனையடுத்து காங்கிரசார் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்