சேலத்தில் உருக்காலை ஊழியரின் மனைவி தற்கொலை

சேலத்தில் உருக்காலை ஊழியரின் மனைவி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-04-03 22:30 GMT
சூரமங்கலம், 

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

சேலம் உருக்காலையில் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வருபவர் தமிழ்செல்வன். இவருடைய மனைவி தமிழரசி (வயது35). இவர்களுக்கு ஜோதிஸ்ரீ (13) என்ற மகளும், கதிர்செல்வன் (3) என்ற மகனும் உள்ளனர்.

இரும்பாலை மோகன் நகர் குடியிருப்பில் தமிழ்செல்வன், குடும்பத்துடன் வசித்து வருகிறார். கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், நேற்று முன்தினம் தமிழ்செல்வன் தனது குழந்தைகளுடன் ஒரு அறையிலும், அவரது மனைவி மற்றொரு அறையிலும் படுத்து தூங்கினர்.

நேற்று அதிகாலை தமிழரசி, மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தமிழ்செல்வன், உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தார்.

இதுபற்றி அறிந்த இரும்பாலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்