வானவில் : ‘மாவோக்ஸ்’ ஹெல்மெட்

இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு மிகவும் அவசியமானது ஹெல்மெட். சட்டத்துக்குப் பயந்து அணிவதை விட உயிரை பாதுகாக்க உதவும் என்பதை உணர்ந்து ஹெல்மெட் அணிவதே சிறந்தது.

Update: 2019-04-03 06:47 GMT
விலை குறைவாக உள்ளது என்பதற்காக தரமற்ற ஹெல்மெட்டை வாங்குவது தவறு. குறைந்தபட்சம் ஐ.எஸ்.ஐ. தரம் பெற்ற ஹெல்மெட்டை அணிவது நல்லது. இந்திய நிறுவனம் மாவோக்ஸ் புதிதாக ஹெல்மெட்டை அறிமுகம் செய்துள்ளது. இந்நிறுவனம் மானேசரில் ரூ.25 கோடி முதலீட்டில் உற்பத்தி ஆலை அமைத்துள்ளது. இந்த ஆலை ஆண்டுக்கு 20 லட்சம் ஹெல்மெட்டை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. மொத்தம் மூன்று மாடலில் ஹெல்மெட்டுகள் வெளிவந்துள்ளன. ஓ.எக்ஸ். 10, ஓ.எக்ஸ். 11 மற்றும் எப்.எக்ஸ். மேக்ஸ்.

இதில் ஓ.எக்ஸ். ரக ஹெல்மெட்டின் விலை ரூ.1,485 ஆகும். இதில் முன்புறத்தில் இரண்டு வைஸர் உள்ள ஹெல்மெட் விலை ரூ.1,650. இதேபோல எப்.எக்ஸ். மேக்ஸ் மாடலில் இரண்டு வெளிவந்துள்ளன. இதில் வண்ணங்கள் கொண்ட ஹெல்மெட் விலை ரூ.2,400. கிராபிக்ஸ் உள்ள ஹெல்மெட் விலை ரூ.3000. இந்த ஹெல்மெட்டுகள் யு.வி. பாதுகாப்பு பெயிண்ட் கொண்டவை. அத்துடன் முன்புற வைஸரில் நீர் புகாது. இதனால் மழைக்காலங்களில் ஹெல்மெட் வழியாக முகத்தில் நீர் வழிவது தவிர்க்கப்படும். உயிர் காக்கும் ஹெல்மெட்டில் தரமானவற்றை வாங்கலாமே.

மேலும் செய்திகள்