விழுப்புரம் அருகே, வழிப்பறியில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது

விழுப்புரம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2019-04-02 23:36 GMT
விழுப்புரம்,

விழுப்புரத்தை அடுத்த வளவனூர் அருகே உள்ள ராம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் வைத்தியநாதன் மகன் மணிகண்டன் (வயது 41). இவர் நேற்று அங்குள்ள ஆற்றுப்பாதை வழியாக தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் திடீரென, மணிகண்டனை வழிமறித்து அவரது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அவரிடமிருந்த ரூ.1,500-ஐ பறித்தனர். உடனே அவர் கூச்சல்போடவே அக்கம், பக்கத்தினர் விரைந்து வந்து 3 பேரையும் மடக்கிப்பிடித்து வளவனூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதையடுத்து அந்த வாலிபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் 3 பேரும் உளுந்தூர்பேட்டை தாலுகா கெடிலத்தை சேர்ந்த சிவராஜ் (30), திருநாவலூரை சேர்ந்த வானவில் (25), பாரதிராஜா (29) என்பது தெரியவந்தது.

இதை தொடர்ந்து சிவராஜ் உள்ளிட்ட 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த மோட்டார் சைக்கிள், கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் 3 பேரையும் விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இவர்கள் 3 பேருக்கும் வேறு ஏதேனும் வழிப்பறி சம்பவத்தில் தொடர்புள்ளதா? என்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்