விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் படுகாயங்களுடன் மீட்பு தாக்கப்பட்டாரா? போலீசார் விசாரணை
கறம்பக்குடி அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். அவர் தாக்கப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள ஆத்தியடிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரபாண்டியன் (வயது 28). இவர் புதுக்கோட்டை மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை செயலாளராக உள்ளார். இந்நிலையில் சந்திரபாண்டியன் நேற்று முன் தினம் இரவு கறம்பக்குடியில் தேர்தல் பணிகளை முடித்து விட்டு வீட்டுக்கு செல்வதாக கட்சி நிர்வாகிகளிடம் கூறிவிட்டு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
சிறிது நேரத்தில் வடக்கு புதுப்பட்டி அருகே சாலையில் படுகாயங்களுடன் சந்திர பாண்டியன் கிடப்பதாக கறம்பக்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் மற்றும் சந்திரபாண்டியன் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு சந்திரபாண்டியன் தலை மற்றும் முகத்தில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவர் சுயநினைவுடன் இல்லை. இதையடுத்து அவரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சந்திரபாண்டியன் தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கிடையே சந்திரபாண்டியன் கொலை செய்யும் நோக்கத்துடன் தாக்கப்பட்டிருப்பதாக உறவினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். பொது பிரச்சினைகளுக்கும், சமூக அக்கறை சார்ந்தும் போராடி வந்ததால் சந்திரபாண்டியன் தாக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் கண்டன பதிவுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதையடுத்து சந்திர பாண்டியனுக்கு காயம் ஏற்பட்டது எப்படி? அவர் தாக்கப்பட்டாரா? அல்லது விபத்தா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட சம்பவம் கறம்பக்குடி பகுதியில் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.