தபால் ஓட்டுகளுக்கான படிவங்கள் அனுப்பும் பணி

அரசு அலுவலர்கள் தேர்தலில் வாக்களிக்கும் விதத்தில் தேர்தல் ஆணையம், தபால் மூலம் வாக்களிக்கும் முறை நடைமுறையில் உள்ளது.

Update: 2019-04-02 22:45 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரம்பலூர், துறையூர், லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி மற்றும் குளித்தலை சட்டமன்ற பகுதிகளை சார்ந்த பல்வேறு பகுதிகளில் பணிபுரியும் ராணுவ வீரர்கள், ஏனைய துணை ராணுவத்தினர், மத்திய காவல் துறையினர், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தேர்தலில் வாக்களிக்கும் விதத்தில் தேர்தல் ஆணையம், தபால் மூலம் வாக்களிக்கும் முறை நடைமுறையில் உள்ளது. இதன் மூலம் தங்களுடைய பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் நேரடியாக வந்து வாக்களிக்க இயலாதவர்கள் தபால் வாக்கினை பயன்படுத்தி தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றலாம். இதனடிப்படையில், பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தலா 5 ஆயிரம் வாக்காளர்களுக்கான வாக்களிக்கும் படிவத்தினை அனுப்பும் பணி நேற்று தொடங்கியதை தொடர்ந்து அதற்கான ஆயத்தப்பணிகளை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான சாந்தா ஆய்வு செய்தார். அப்போது பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் மஞ்சுளா உள்பட பலர் உடனிருந்தனர். 

மேலும் செய்திகள்