திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு ‘ஏ பிளஸ்’ அந்தஸ்து துணைவேந்தர் மணிசங்கர் பேட்டி
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் ‘ஏ பிளஸ்’ அந்தஸ்து பெற்றது.
திருச்சி,
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் 151 கல்லூரிகள் இணைவு பெற்று இயங்கி வருகிறது. பல்கலைக்கழக மானிய குழுவின் தேசிய தர மதிப்பீட்டு குழு பல்கலைக்கழகங்களை ஆய்வு செய்து தர சான்றிதழ் வழங்கி வருகிறது. அந்த வகையில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு கடந்த 2013-ம் ஆண்டு ‘ஏ’ தகுதி கிடைத்தது. 5 ஆண்டுகள் முடிவடைந்த பின் அடுத்த தகுதி சான்றிதழ் பெற சுயமதிப்பீட்டு அறிக்கை ஆன்-லைன் மூலம் தேசிய தர மதிப்பீட்டு குழுவிற்கு கடந்த ஜனவரி மாதம் சமர்ப்பிக்கப்பட்டது.
தேசிய தர மதிப்பீட்டு குழு தங்களது நடைமுறைகளை குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு மாற்றி அமைப்பது உண்டு. அந்த வகையில் கடந்த 2017-ம் ஆண்டு புதிய நடைமுறைகளை விதித்தது. அதன் அடிப்படையில் விண்ணப்பித்தோம். ஆன்-லைன் முறையிலும், நேரடியாகவும் தேசிய தர மதிப்பீட்டு குழு ஆய்வு செய்தது.
பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டங்கள், கற்பித்தல், மதிப்பீட்டு முறைகள், கட்டமைப்பு உள்பட 7 காரணிகளை அடிப்படையாக கொண்டு 5 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் பல்கலைக்கழகத்திற்கு 77.1 சதவீதம் தர மதிப்பீடு கிடைத்தது. எங்களது சுய மதிப்பீட்டு அறிக்கையின் படி 85.10 சதவீதம் தர மதிப்பீடு கிடைக்கும் என எதிர்பார்த்தோம். மொத்தம் 4 புள்ளிகளுக்கு 3.32 புள்ளிகள் கிடைத்து ‘ஏ பிளஸ் கிரேடு’ தரத்தை தேசிய தர மதிப்பீடு குழு வழங்கி உள்ளது. இந்த தரம் வருகிற 2024-ம் ஆண்டு வரை இருக்கும். ‘ஏ பிளஸ்’ தரம் பெற்றதன் மூலம் பல்கலைக்கழகத்தால் ஆன்-லைன் மூலம் படிப்புகள், பாடங்கள் நடத்த முடியும்.
பல்கலைக்கழகம் மூலம் தொலைதூர கல்வியை எந்த தடையும் இல்லாமல் தொடர்ந்து நடத்த முடியும். தொலைதூர கல்வி மையங்கள் இயங்க விதிக்கப்பட்ட சில நிபந்தனைகளால் மாணவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்தில் இருந்து 8 ஆயிரமாக குறைந்தது. இதனை அதிகரிக்க தற்போது நடவடிக்கை எடுத்துள்ளோம். தொலை தூர கல்வி கற்பித்தல் மையங்கள் கூடுதல் இடங்களில் அமைக்கப்பட உள்ளது. மொத்தம் 132 இடங்கள் உள்ளதை 200 எண்ணிக்கையாக மாற்ற உள்ளோம். தொலை தூர கல்வியில் கல்வி ஆண்டு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ’காலண்டர்’ ஆண்டு அடிப்படையிலும் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
பல்கலைக்கழகத்திற்கு மானிய குழு மற்றும் மனித வள மேம்பாட்டு துறை மூலம் ரூ.100 கோடி வரை நிதி கிடைக்க வாய்ப்பு உள்ளது. மாணவர்களின் பட்ட சான்றிதழ்களில் பல்கலைக்கழகத்தின் பெயருக்கு கீழ் ‘ஏ பிளஸ்’ தரம் குறிப்பிடப்படும். தேசிய தர மதிப்பீட்டு குழுவின் புதிய நடைமுறையில் தமிழகத்தில் அரசு பல்கலைக்கழகங்களில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் ‘ஏ பிளஸ்’ தரம் பெற்றுள்ளது. நாடாளுமன்ற தேர்தலையொட்டி பல்கலைக்கழக பருவ தேர்வுகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இளங்கலை படிப்புக்கு வருகிற 22-ந் தேதியும், முதுகலை படிப்புக்கு 29-ந் தேதியும் பருவத்தேர்வுகள் தொடங்குகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது பதிவாளர் கோபிநாத் கணபதி, பல்கலைக்கழக உள் தர உத்தரவாத பிரிவு இயக்குனர் ராஜசேகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.