வருமான வரி சோதனை தப்பு செய்தவர்களுக்கு திகிலூட்டும் - கமல்ஹாசன் கருத்து

வருமான வரி சோதனை தப்பு செய்தவர்களுக்கு திகிலூட்டும் என்று கமல்ஹாசன் கூறினார்.;

Update: 2019-04-01 23:00 GMT
புதுச்சேரி,

புதுவையில் முதன் முறையாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் பிரசார பொதுக் கூட்டம் ரோடியர் மில் திடலில் நேற்று முன்தினம் நடந்தது. கட்சியின் வேட்பாளர் டாக்டர் எம்.ஏ.எஸ்.சுப்ரமணியனை ஆதரித்து கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சிறப்புரையாற்றி னார். அப்போது புதுவைக் கான தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. இதன் பின் இரவில் கமல்ஹாசன் புதுவையில் தங்கினார்.

புதுவை கந்தப்ப முதலி வீதியில் கட்சியின் தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நேற்று காலை நடந்தது. அங்கு பெண் தொண்டர் ஒருவர் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். கட்சி அலுவலகத்தை கமல்ஹாசன் திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

நான் திறந்து வைத்திருக்கும் இந்த அலுவலகம் மக்களுக்காக எப்போதும் திறந்தே இருக்கும். மக்கள்தான் இதற்கு சொந்தக்காரர்கள். நமது வழக்கப்படி கட்சிக் கொடியை தொண்டர்கள் தான் ஏற்றவேண்டும். ஏனெனில் நாம் ஏற்றிய கொடி சாயாமல் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொரு தொண் டனுக்கும் வரவேண்டும்.

கொடியின் ஞாபகமாக இங்கு மரக்கன்று ஒன்றையும் நட்டு பராமரியுங்கள். குறுகிய காலத்தில் டாக்டர் எம்.ஏ.எஸ்.சுப்ரமணியன் பெரிய சாதனையை நிகழ்த்தி யுள்ளார். கட்சிக்கூட்டம் மனதிற்கு நம்பிக்கையாக, இதமாக இருந்தது. பலர் தொலைபேசியில் என்னை தொடர்புகொண்டு பாராட்டி னார்கள். நான் பேசியது பிறரது நெஞ்சை தொட்டது மகிழ்ச்சிதான்.

மக்கள் நீதி மய்யம் வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதற்கு பொதுக்கூட்டமே சான்று. தொடர்ந்து வெற்றியை நோக்கி அது நகர்ந்து கொண்டே இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து நிருபர்களிடம் கமல்ஹாசன் பேசும்போது, ‘புதுச்சேரியை புதிய மாநிலமாக மாற்ற பலர் காத்துக் கொண்டுள்ளனர். வருமான வரிச்சோதனை நடத்துவது மிரட்டுவதற்காக என்று சிலர் சொல்கின்றனர். வருமான வரிசோதனை என்பது தப்பு செய்தவர்களுக்கு திகிலூட்டக்கூடிய விஷய மாகத்தான் நான் பார்க்கிறேன்’ என்றார்.

மேலும் செய்திகள்