மு.க.ஸ்டாலினுக்கு தேர்தல் காய்ச்சல் வந்துவிட்டது: இந்தியாவை வழிநடத்த மோடியே தகுதியானவர் காரைக்குடி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
ஸ்டாலினுக்கு தேர்தல் காய்ச்சல் வந்துவிட்டது என்றும், இந்தியாவை வழிநடத்த மோடியே தகுதியானவர் எனவும், காரைக்குடியில் நேற்று இரவில் நடந்த பிரசாரத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.;
திருப்பத்தூர்,
சிவகங்கை தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் எச்.ராஜாவை ஆதரித்து, திருப்பத்தூரில் நேற்று இரவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார். அங்கு திரண்டிருந்த மக்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-
அ.தி.மு.க. உழைப்பை அங்கீகரிக்கும் கட்சி. திருப்பத்தூரைச் சேர்ந்த தொண்டன் கூட முதல்-அமைச்சராக முடியும். எங்கள் கூட்டணி மெகா கூட்டணி என்பதால் ஸ்டாலின் ஏதேதோ உளறி வருகிறார். நாட்டு மக்கள் பாதுகாப்பாக வாழ மோடி மீண்டும் பிரதமராக வேண்டும். நிறைவேற்ற முடியாத தேர்தல் அறிக்கையை தி.மு.க. வெளியிட்டு உள்ளது. பல அறிவிப்புகளை வாக்குகளுக்காக அறிவித்து உள்ளனர். நாங்கள் நிறைவேற்ற முடிந்ததை தேர்தல் அறிக்கையாக வெளியிட்டு உள்ளோம். ஜெயலலிதா 2011-ல் வெளியிட்ட தேர்தல் அறிக்கையை நிறைவேற்றினார்.
அதே போல் 2016-ம் ஆண்டு தேர்தலில் அவர் அளித்த வாக்குறுதிகளை நாங்கள் நிறைவேற்றி வருகிறோம். கருணாநிதி நிலம் இல்லாதவர்களுக்கு 2 ஏக்கர் நிலம் தருவதாக சொன்னார். நிறைவேற்றவில்லை. மத்திய, மாநில அரசுகள் மீது குறை கூறுவதை ஸ்டாலின் நிறுத்த வேண்டும்.
ம.தி.மு.க., தி.மு.க. சின்னத்தில் நிற்கிறது. இதனால் ம.தி.மு.க.விற்கு யார் தலைவர் என்றே தெரியவில்லை. மக்கள் நினைப்பதை நிறைவேற்றும் அரசாக அ.தி.மு.க. அரசு உள்ளது. இந்த தொகுதியை சேர்ந்த ப.சிதம்பரம் தமிழகத்திற்கும், தொகுதிக்கும் இம்மி அளவு கூட நன்மை செய்யாதவர்.
ஸ்டாலின் மகன் ஆதிக்கம் செலுத்துவது போல், இங்கு சிதம்பரம் மகன் ஆதிக்கம் செலுத்துகிறார். தமிழகத்தில் ராகுலை பிரதமர் என்று சொன்ன ஸ்டாலின், “மேற்கு வங்கத்தில் கூட்டணி கட்சி முடிவு செய்யும்” என்கிறார். அதிகாரம் எவ்வளவு தான் இருந்தாலும், மக்களின் அன்பை பெற்றவர்கள்தான் ஆட்சிக்கு வர முடியும்.
என்னை மண்புழு என்று ஸ்டாலின் கூறினார். ஆனால் நான் மண்புழு உரமாக இருந்து உழவனின் நண்பனாக செயல்படுவேன். இந்த தேர்தல் மூலம் தி.மு.க.வுக்கு பாடம் புகட்ட வேண்டும். எனவே நீங்கள் எச்.ராஜாவுக்கு வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் காரைக்குடி ஐந்து விளக்கு அருகே முதல்-அமைச்சர் பழனிசாமி பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
இந்தியாவை வழி நடத்த உறுதியான பிரதமர் வேண்டும். அதற்கு மீண்டும் மோடியே தகுதியானவர். 2014-ம் ஆண்டு தேர்தலின் போது அ.தி.மு.க. 37 இடங்களையும், பா.ஜ.க., பா.ம.க. தலா ஒரு இடமும் பெற்றன. தற்போது இவை அனைத்தும் ஓர் அணியில் இருப்பதால் நமது கூட்டணி 39 இடங்களையும் கைப்பற்றும். ஸ்டாலின் தோல்வி பயத்தில், விரக்தியின் விளிம்பில் வரம்பு மீறி வசை பாடுகிறார். அவருக்கு தேர்தல் காய்ச்சல் வந்து விட்டது.
அ.தி.மு.க. கூட்டணி மக்களுக்கு சேவை செய்வதற்காக உருவான கூட்டணி. நாட்டின் வளர்ச்சிக்காக அமைந்த கூட்டணி. தி.மு.க. சந்தர்ப்பவாத கூட்டணியை அமைத்துள்ளது. மு.க.ஸ்டாலின் எந்த பதவிக்கும் வந்து விடக்கூடாது என்று பேசிய வைகோவின் கட்சி தற்போது உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பிரசாரத்தில் அமைச்சர்கள் பாஸ்கரன், விஜயபாஸ்கர், செந்தில்நாதன் எம்.பி. உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.