நாட்டில் பன்முகத்தன்மை பாதுகாக்கப்படாவிட்டால் எதிர்பாராத விபரீதம் நடக்கும் திருச்சியில் வைகோ பேச்சு
நாட்டில் பன்முகத்தன்மை பாதுகாக்கப்படாவிட்டால் எதிர்பாராத விபரீதம் நடக்கும் என்று திருச்சியில் வைகோ பேசினார்.
திருச்சி,
திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் பாலக்கரை எடத்தெரு அண்ணாசிலை அருகே நேற்று நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசியதாவது:-
இந்த நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து உருவாகி இருக்கிறது. எதிர்காலம் ரத்தக்களறியாக ஆகிவிடுமோ? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க வேண்டிய கடமை நம் அனைவருக்கும் உண்டு. பிரதமர் மோடி தமிழகத்தை வஞ்சித்தது போதாதா?. கஜா புயல் பாதிப்பால் 89 பேர் மடிந்தார்கள். இதற்கு மோடி அனுதாபமாவது தெரிவித்தாரா?. தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்ட மக்கள் புயல் பாதிப்புக்குள்ளாகி அழுது புலம்பியபோது உலக நாடுகள் எல்லாம் சுற்றினார்.
நெற்களஞ்சியமான தஞ்சையை பஞ்சம், பட்டினியாக உள்ள எத்தியோபியாவை போல ஆக்க வேண்டிய உங்கள் நோக்கம் என்ன?. விவசாயிகள் எல்லாம் நிலத்தை விற்பார்கள். அந்த நிலங்களை பெரும்முதலாளிகள் வாங்கி மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற இயற்கை எரிவாயுகளை எடுப்பார்கள். இதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் கிடைக்கும். ஆனால் நாங்கள் அழிந்து போவோம். இதை தடுக்க திராணியற்ற நிலையில் எடப்பாடி பழனிசாமி அரசு இருக்க என்ன காரணம்?. குட்கா ஊழல், பருப்பு ஊழல், கல்வித்துறையில் ஊழல் போன்றவை மிரட்டுகிறது.
சரக்கு சேவை வரி மூலம் வணிகத்தை நாசமாக்கி விட்டீர்கள். கல்விக்கடன், விவசாய கடனை ரத்து செய்ய மாட்டோம் என்கிறீர்கள். ஆனால் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ரூ.2 லட்சத்து 42 ஆயிரம் கோடி கடன்களை தள்ளுபடி செய்கிறீர்கள். ஒரு பக்கம் வேலை இல்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. மற்றொரு பக்கம் பொள்ளாச்சி பாலியல் தொல்லையால் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். தமிழகம் அனைத்து தரப்பிலும் வஞ்சிக்கப்படு கிறது. ஆனால் இந்தி, சமஸ்கிருதம் திணிக்கப்படுகிறது. இந்த நாட்டில் ஒற்றுமை, ஒருமைப்பாடு, பன்முகத்தன்மை பாதுகாக்கப்படாவிட்டால் எதிர்பாராத விபரீதம் நடக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் வேட்பாளர் திருநாவுக்கரசர் பேசுகையில், “நான் 6 முறை சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், துணை சபாநாயகர், மத்திய, மாநில அமைச்சர் என பல பொறுப்புகளில் இருந்துள்ளேன். தற்போது திருச்சி வாக்காள பெருமக்களை நம்பி வந்து இருக்கிறேன். இந்த தொகுதியில் வெற்றியை தேடி தாருங்கள்” என்றார்.
கூட்டத்தில் தி.மு.க. மாவட்ட செயலாளர் கே.என்.நேரு, பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் பாரிவேந்தர், புதுக்கோட்டை மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் சந்திரசேகரன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர் தொகுதி நாடாளுமன்ற தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி (தி.மு.க) சார்பில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் டி.ஆர்.பாரிவேந்தரை ஆதரித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று பெரம்பலூரில் பிரசாரம் செய்தார். அங்கு வைகோ பிரசாரம் செய்து பேசியதாவது:-
இந்த தேர்தல் ஜனநாயகத்திற்கும், பாசிசத்திற்கும் நடக்கும் தேர்தல் ஆகும். உலகம் சுற்றும் நரேந்திரமோடி வெளிநாட்டு முதலீடுகளை இந்தியாவிற்கு அனுமதித்துள்ளதால் அம்பானி, அதானி போன்ற தொழிலதிபர்கள் வளர்கின்றனர். ஆனால் கோடிக்கணக்கான வணிகர்கள் பெரும்பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர்.
தமிழகத்தில் “கஜா” புயலின்போது பெரும்பாலான தென்னைமரங்கள் சேதமடைந்ததற்கு மோடி அனுதாபம்கூட தெரிவிக்கவில்லை. ராகுல் காந்தி பிரதமாக வரும்போது இந்தியா முழுவதும் உள்ள 22 லட்சம் காலிப்பணி இடங்கள் நிரப்பப்படும் என்றும், ஏழை- எளிய மக்களுக்கு மாதம் தலா ரூ.6 ஆயிரம் வீதம் ஆண்டிற்கு ரூ.72 ஆயிரம் வழங்குவோம் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்திருக்கிறார். இந்த அறிவிப்பு சாத்தியம் என்பதை மத்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுனர் ரகுராம் ராஜன் ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் தற்போது ஜனநாயகத்திற்கு ஆபத்து உள்ளாகியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியில் லஞ்சம், ஊழல் மலிந்துவிட்டதால் தமிழகத்திற்கு வந்திருக்கவேண்டிய மோட்டார் உற்பத்தி ஆலை வேறுமாநிலத்திற்கு சென்றுவிட்டது. ஜப்பான் நாட்டின் கார்தொழிற்சாலை ஆந்திராவிற்கு சென்றுவிட்டது. பிரான்ஸ் நாட்டின் மெட்ரோ ரெயில் உருவாக்கும் தொழிற்சாலை தமிழகத்தில் அமையவில்லை. இப்படி தொழில்துறை புதைமணல்போல் ஆகிவிட்டது.