மனிதர்களாலும் காந்தப்புலத்தை அறிந்து செயல்பட முடியும்

பல்வேறு பறவையினங்களும், விலங்குகளும் திசை, வானிலை, நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரிடர்களை உணாந்து கொள்ளும் ஆற்றலை பெற்றிருக்கின்றன.

Update: 2019-04-01 09:54 GMT
உதாரணமாக புறாக்கள், கடல் கடந்து கொண்டு செல்லப்பட்டாலும் தனது எஜமானர் இல்லத்தை திரும்ப வந்தடைவதைச் சொல்லலாம். புவியின் காந்தப்புலத்தை அடையாளம் காணும் ஆற்றலைக்கொண்டு அவை திசையறிந்து வீடு திரும்புவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதேபோல மனிதனாலும் புவியின் காந்தப்புலத்தை அறிந்து கொண்டு செயல்பட முடியும் என்று புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா தொழில்நுட்ப மைய ஆய்வாளர்கள், மனிதனாலும் திசையறியும் பயன்பாட்டிற்காக புவியின் காந்தப்புலத்தை உணர்ந்து பயன்படுத்த முடியும் என்று கண்டுபிடித்துள்ளனர். மூளையின் குறிப்பிட்ட செல்களில் நானோகிறிஸ்டல்கள் எனும் தாதுக்கள் இருந்தால் நம்மாலும் காந்தப்புலத்தை அறிந்து செயல்பட முடியும் என்கிறது அவர்களது ஆய்வு.

நமது மூளை செல்களிலும், பல உடல் உறுப்புகளிலும் இந்த நானோ கிறிஸ்டல் தாதுக்கள் இருப்பதும், அவை நுண்காந்தங்களாக செயல்படுவதையும் இந்த பல்கலைக்கழக ஆய்வுக்குழு கண்டறிந்துள்ளது. கூண்டில் செயற்கையாக காந்தப்புலம் உருவாக்கி, மியூசிக்கல் சேர் விளையாட்டு போல, இருக்கைகளை இடம் மாறுதல் செய்து சிலரை சோதனைக்கு உள்ளாக்கியபோது, தங்களின் இருக்கையை மூளை செல்கள் காந்தப்புலம் உதவியுடன் இனம் கண்டது இ.இ.ஜி. கருவியில் பதிவானது. இதன் மூலம் மனிதனாலும் காந்தப்புலத்தை அறிந்து செயல்பட முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. இது பற்றிய மேலதிக ஆய்வுகள் நடக்கிறது.

மேலும் செய்திகள்