கிரிக்கெட்டை ‘கேரியராக’ தேர்வு செய்ய இருக்கிறீர்களா?
இந்திய இளைஞர்களின் விருப்பத்துக்குரிய விளையாட்டில் ஒன்றாக இருப்பது கிரிக்கெட். நகரத்து விளையாட்டு மைதானங்கள், விடுமுறை நாட்களில் கின்னஸ் சாதனை கூட்டம்போல விளையாட்டு வீரர்களால் நிரம்புவதே அதற்கு சாட்சி.
கிராமப்புறங்களிலும் கிரிக்கெட் ஆர்வத்திற்கு குறைவில்லை. அங்கும் கோடை கால கிரிக்கெட் திருவிழாக்கள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. ரஞ்சி டிரோபி, ஐ.பி.எல்., உலக கோப்பை என அவர்களுக்கான விருந்துப் போட்டிகளும் அடுத்தடுத்து அவர்களின் மனங்களை ஆக்கிரமிக்கும். ஒவ்வொருவர் மனதிலும் கனவு நாயகனாக ஒரு வீரரை சுமப்பது கிரிக்கெட் பிரியர்களின் வாடிக்கையாக உள்ளது.
கிரிக்கெட்டை ஒரு விளையாட்டாக மட்டும் எடுத்துக் கொள்ளாமல், வாழ்க்கைப் பாதையாக, உங்களுக்கான ‘கேரியராக’ அமைத்துக் கொள்ள முடியும். ஆனால் அதிக போட்டிமிக்க இந்தத் துறையில் சோபிக்க அதீத ஆர்வமும், தீவிர பயிற்சியும், முயற்சிகளும் அவசியம். சிறுவயது முதலே இதற்கான பயிற்சியை தொடங்க வேண்டும். பள்ளிப்பருவத்தில் இருந்தே போட்டிகளில் பங்கெடுப்பது கிரிக்கெட் பயணப் பாதையை சுலபமாக்கும்.
இந்திய இளைஞர்கள் மத்தியில் கிரிக்கெட் மோகம் இவ்வளவு இருந்தும், இதற்கென தனி படிப்பு எதுவும் இதுவரை உருவாக்கப்படவில்லை. பள்ளி விளையாட்டு வகுப்பில் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்து விளையாடி பயிற்சி பெற வேண்டியதுதான். சிறந்த விளையாட்டுத் திறனை வெளிப்படுத்தி வந்தால் பள்ளிகளுக்கு இடையேயான போட்டிகளிலும், மாவட்ட அளவிலான, மாநில அளவிலான போட்டிகளிலும் உங்கள் விளையாட்டுத் திறன் வெளிப்படுவது உங்களுக்கான அடுத்த கட்ட பயணத்தை எளிதாக்கும்.
இந்திய விளையாட்டுத் துறையால், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட கிரிக்கெட் கழகம் உருவாக்கப்பட்டு உள்ளது. மாவட்ட அளவிலான போட்டிகள் நடத்தப்படும்போது இதில் பெயரை பதிவு செய்து கொண்டு விளையாட வேண்டும். அது உங்கள் திறமைகளை பதிவு செய்யும் வாய்ப்பாக அமையும். இதுபோல மாநில அளவிலும், தேசிய அளவிலும் கிரிக்கெட் கழகங்கள் செயல்படுகிறது.
பள்ளி கல்லூரி, மற்றும் பல்கலைக்கழக அளவிலான போட்டிகளில் சாதிப்பதுடன், கிரிக்கெட் கழகத்தில் பெயரை பதிவு செய்து கொள்வது கிரிக்கெட் கேரியருக்கான அடிப்படை. தேசிய அளவில் இளநிலை கிரிக்கெட் போட்டிகளையும், வீரர்களையும் ஒருங்கிணைப்பதற்காக ‘ஆல் இந்தியா ஜூனியர் செலக்சன் கமிட்டி’ செயல்படுகிறது. இவை 15 வயது, 17 மற்றும் 19 வயதுக்கு உட்பட்டோர் அணிகளாக தரம்பிரித்து விளையாட்டு போட்டிகளை ஒருங்கிணைக்கிறது. அதில் வீரர்களின் சாதனைக்கேற்ப பல்வேறு மண்டலங்களில் சிறப்பாக செயல்படுபவர்களில் இருந்து, ஒரு மண்டலத்திற்கு 5 பேரை தேர்வு செய்து அடுத்தகட்ட போட்டிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்குகிறது.
இதேபோல மூத்தோர் கிரிக்கெட் அணியை தேர்வு செய்யவும் சீனியர் செலக்சன் கமிட்டி செயல்படுகிறது. இளநிலை வீரர்களாக இருந்து சாதிப்பவர்கள்தான்