வால்பாறை அருகே, வனவிலங்குகள் மோதலில் சிறுத்தைப்புலி குட்டி சாவு

வால்பாறை அருகே வனவிலங்குகள் மோதலில் சிறுத்தைப்புலி குட்டி இறந்தது.

Update: 2019-03-31 23:35 GMT
வால்பாறை, 

வால்பாறை அருகே உள்ள அய்யர்பாடி எஸ்டேட் முதல் பிரிவு 4-ம் நம்பர் தேயிலைத் தோட்ட பகுதியில் தொழிலாளர்கள் வேலைக்கு சென்றனர். அப்போது அந்த பகுதியில் அழுகிய நிலையில் சிறுத்தைப்புலி குட்டி இறந்து கிடந்துள்ளது. உடனடியாக இதுகுறித்து எஸ்டேட் நிர்வாகம் சார்பில் வால்பாறை வனச்சரக வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.தகவல் அறிந்து வால்பாறை வனச்சரகர் சக்திகணேஷ் தலைமையில் வனவர் சபரீஸ்வரன் மற்றும் வேட்டைத்தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

பின்னர் இறந்து கிடந்த சிறுத்தைப்புலி குட்டியின் உடலை கைப்பற்றி அய்யர்பாடி மனித-வனவிலங்கு மோதல் தடுப்பு மையத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் வால்பாறை அரசு கால்நடை டாக்டர் பிரகாஷ் வரவழைக்கப்பட்டு, சிறுத்தைப்புலி குட்டியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

இந்த பரிசோதனையில் வனவிலங்குகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் பலத்த காயமடைந்து சிறுத்தைப்புலி குட்டி இறந்திருக்கலாம். இறந்தது 5 மாத சிறுத்தைப்புலி குட்டியாகும் என்று தெரிவித்தனர். மேலும் உடல் அழுகிய நிலையில் இருந்ததால், சிறுத்தைப்புலி குட்டி இறந்து 5 நாட்களுக்கு மேல் இருக்கும் என்று வனத்துறையினர் தெரிவித்த னர்.பிரேத பரிசோதனைக்கு பிறகு சிறுத்தைப்புலி குட்டியின் உடல் அங்கேயே தீ வைத்து எரிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்