தொட்டியம் அருகே குடிநீர் வசதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
தொட்டியம் அருகே குடிநீர் வசதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தொட்டியம்,
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள ஸ்ரீராமசமுத்திரம் கிராமத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்த கிராம மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக கூட்டுக்குடிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று கடந்த 10 ஆண்டுகளாக இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்தநிலையில் தற்போது இந்த கிராமத்தில் கடும்குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், தங்கள் பகுதிக்கு போதுமான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்றும், கூட்டுக்குடிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை மனு கொடுத்தனர். ஆனால் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள், நேற்று காலை காலி குடங்களுடன் ஸ்ரீராமசமுத்திரம் பஸ்நிறுத்தத்தில் திரண்டனர். அங்கு தங்கள் கிராமத்துக்கு குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று கோரி திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்த தொட்டியம் தாசில்தார் ரபீக்அகமது, போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் ஒன்றிய ஆணையாளர் ரவிக்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள், மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது, உங்கள் கிராமத்துக்கு குடிநீர் வசதி செய்து கொடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.