வழிபாட்டு தலங்களில் ஓட்டு கேட்க கூடாது: வேட்பாளர்கள், முகவர்கள் கூட்டத்தில் கலெக்டர் பேச்சு
‘வழிபாட்டு தலங்களில் ஓட்டு கேட்க கூடாது’ என்று வேட்பாளர்கள், முகவர்கள் கூட்டத்தில் கலெக்டர் ராஜாமணி கூறினார்.
கோவை,
கோவை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்கள், முகவர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் தேர்தல் பொது பார்வையாளர் ரேணு ஜெய்பால், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன், மாநகர போலீஸ் துணை கமிஷனர் பாலாஜி சரவணன், பயிற்சி கலெக்டர் சினேகா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (தேர்தல்) நாராயணன், (கணக்குகள்) சேஷாத்ரி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பிரபாகரன், முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான ராஜாமணி பேசியதாவது:-
அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள், பிற கட்சிகளின் கொள்கை, திட்டங்கள் மற்றும் கடந்த கால செயல்முறையை மட்டுமே தேர்தல் பிரசாரத்தின் போது பேச வேண்டும். மாறாக கட்சிகளின் தலைவர் அல்லது வேட்பாளர்களது பொது வாழ்க்கைக்கு தொடர்பில்லாத தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விமர்சனத்தை தவிர்க்க வேண்டும்.
பிற கட்சிகள் அல்லது அதன் தொண்டர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள ஊர்ஜிதப்படுத்தப்படாத குற்றச்சாட்டுகளின் மீதான விமர்சனங்களை தவிர்க்க வேண்டும். வெவ்வேறு மதம், சாதி மற்றும் மொழி சார்ந்தவர்கள் இடையே உள்ள கருத்து வேற்றுமைகளை தூண்டும் நடவடிக்கைகளில் ஈடுபட கூடாது.
மசூதி, தேவாலயம், கோவில்கள் மற்றும் வழிபாட்டு தலங்களில் தேர்தல் பிரசாரம் செய்வதோ, ஓட்டு கேட்கவோ கூடாது. அனைத்து கட்சியினர் மற்றும் வேட்பாளர்களும் தேர்தல் சட்டப்படி ஊழல் நடவடிக்கைகளாக கருதப்படும் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தல், வாக்காளர்களை மிரட்டுதல், போலி வாக்களித்தல், வாக்கு சாவடியில் இருந்து 100 மீட்டருக்குள் ஓட்டு சேகரித்தல், வாக்குப் பதிவு முடிவதற்கு 48 மணிநேரம் இருக்கும் கால கட்டத்தில் தேர்தல் கூட்டங்கள் நடத்துதல், வாக்குச் சாவடிகளுக்கு வாக்காளர்களை வாகனத்தில் ஏற்றி செல்லுதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
எந்தவொரு அரசியல் கட்சியோ, வேட்பாளர்களோ அல்லது தொண்டர்களோ மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தனிப்பட்ட நபர்களின் சொத்துகளில் விளம்பரம் செய்யக்கூடாது. கிராமப்பகுதிகளில் எந்தவொரு தனிப்பட்ட நபரின் அனுமதியில்லாமல் அவரது இடத்தில் அல்லது வளாகத்தில் சுவர் விளம்பரம், கொடி கட்டுதல், விளம்பர பலகை அமைத்தல் மற்றும் சுவரொட்டிகளை ஒட்டுதல் போன்ற செயல்களை செய்யக்கூடாது. அப்படி செய்தால் அது தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயலாக கருதி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கட்சி அல்லது வேட்பாளர்கள் தேர்தல் பிரசார கூட்டம் நடத்துவதற்கு முன்பு கூட்டம் நடத்தப்பட உள்ள இடம், நேரம் குறித்து ஒற்றை சாளர குழுவிற்கு விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும். அவ்வாறு அனுமதி கோருவதற்கு முன்பு அந்த இடத்தில் கூட்டம் நடத்துவதற்கு தடையாணை ஏதேனும் அமலில் உள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
அவ்வாறு தடையாணை அமலில் இருந்தால் அதனை தளர்த்தி அனுமதி பெறும் வகையில் முன்கூட்டியே விண்ணப்பித்து உரிய உத்தரவு பெற வேண்டும். தேர்தல் பிரசாரத்திற்கு, ஒலிபெருக்கி அல்லது இதர வசதிகளை பயன்படுத்துவதற்கு ஒற்றை சாளர குழுவிற்கு விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும். கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை பயன்படுத்தக்கூடாது.
காலை 6 மணிக்கு முன்பும், இரவு 10 மணிக்கு பின்பும் ஒலிபெருக்கிகளை கட்டாயம் பயன்படுத்த கூடாது. ஒரு கட்சி அல்லது வேட்பாளர் தேர்தல் பிரசார ஊர்வலம் ஏதேனும் ஏற்பாடு செய்தால் முன்கூட்டியே ஊர்வலம் நடத்தப்பட உள்ள நாள், நேரம், வழித்தடம் மற்றும் ஊர்வலம் எங்கு தொடங்கி எங்கு முடிவடையும் போன்ற விவரங்களை அளித்து ஒற்றை சாளர குழுவிடம் அனுமதி பெற வேண்டும்.
எந்த நிகழ்ச்சியையும் உரிய அனுமதி பெற்ற பின்பே நடத்த வேண்டும். ஊர்வலத்தில் கலந்து கொள்பவர்கள் மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பொருட்களை எடுத்து செல்லக் கூடாது. இதை அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.