வெலிங்டன் ராணுவ முகாமில் பயிற்சி முடித்த வீரர்கள் சத்திய பிரமாணம் எடுத்தனர்
வெலிங்டன் ராணுவ முகாமில் பயிற்சி முடித்த வீரர்கள் சத்திய பிரமாணம் எடுத்தனர்.
குன்னூர்,
குன்னூர் அருகே உள்ள வெலிங்டனில் மெட்ராஸ் ரெஜிமெண்டல் சென்டர்(எம்.ஆர்.சி.) ராணுவ முகாம் செயல்பட்டு வருகிறது. தென்னிந்தியாவில் இருந்து ராணுவத்துக்கு தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு, இந்த முகாமில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு ஆயுத பயிற்சி, இந்தி மொழி பயிற்சி உள்பட பல்வேறு கடுமையான பயிற்சிகள் 46 வாரங்கள் வீரர்களுக்கு அளிக்கப்படுகிறது. இந்த நிலையில் வெலிங்டன் ராணுவ முகாமில் பயிற்சி முடித்த 485 வீரர்கள் சத்திய பிரமாணம் எடுக்கும் நிகழ்ச்சி நேற்று காலை 8.30 மணியளவில் நடைபெற்றது.
இதற்கு ராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் ஜி.எஸ்.பிஸ்த் தலைமை தாங்கினார். தொடர்ந்து வீரர்களுக்கு சத்திய பிரமாணம் செய்து வைத்தார். அப்போது பகவத் கீதை, பைபிள், குரான் மற்றும் உப்பு ஆகியவற்றின் மீது கை வைத்து வீரர்கள் சத்திய பிரமாணம் எடுத்து கொண்டனர். முன்னதாக சத்திய பிரமாணம் எடுக்கும் வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்று கொண்டார். இதையடுத்து அணிவகுப்பை சிறப்பாக நடத்திய வீரர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன.