கொட்டாம்பட்டி அருகே நடுரோட்டில் வேன் கவிழ்ந்து 21 பெண்கள் காயம்
கொட்டாம்பட்டி அருகே டயர் வெடித்து நடுரோட்டில் வேன் ஒன்று கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனில் சென்ற 21 பெண்கள் காயம் அடைந்தனர்.;
கொட்டாம்பட்டி,
கொட்டாம்பட்டி அருகே உள்ள சொக்கலிங்கபுரம் கணேசபுரம் பகுதியை சேர்ந்த பெண்கள், ஒவ்வொரு மாதமும் கொல்லிமலைக்கு சென்று வீட்டுக்கு தேவையான பலசரக்கு பொருட்கள் வாங்கி வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதற்காக வாடகைக்கு வேன் எடுத்து பெண்கள் செல்வார்கள்.
அதன்படி நேற்று காலை கணேசபுரம் பகுதியை சேர்ந்த 21 பெண்கள் பலசரக்கு பொருட்கள் வாங்குவதற்காக வேன் ஒன்றில் கொல்லி மலைக்கு சென்றனர். அந்த வேனை சிவகங்கை மாவட்டம் அ.காளாப்பூரை சேர்ந்த சத்தியமூர்த்தி (வயது 40) என்பவர் ஓட்டிச் சென்றார். கொல்லிமலையில் வீட்டுக்கு தேவையான பலசரக்கு பொருட்கள் மற்றும் பழங்கள் வாங்கி கொண்டு மீண்டும் அதே வேனில் பெண்கள் கணேசபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
அந்த வேன் கொட்டாம்பட்டியை அடுத்த பள்ளப்பட்டி நான்கு வழிச்சாலையில் வந்து கொண்டிருந்தது. வேனும் சற்று வேகமாக வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் திடீரென்று வேனின் பின்பக்க டயர் ஒன்று வெடித்தது. இதில் நிலை தடுமாறி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் நடு ரோட்டில் தறிகெட்டு ஓடியது. இதனால் வேனில் வந்த பெண்கள் அலறினர். ஒரு கட்டத்தில் அந்த வேன் சாலையின் நடுவில் இருந்த தடுப்புச்சுவரில் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது.
இந்த விபத்தில் வேனில் வந்த முருகேசுவரி (50), கோசலை(40), மகேசுவரி (36), அழகு (45), லதா (36), சரண்யா (30) உள்பட 21 பெண்கள் காயமடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த பள்ளப்பட்டி கிராம மக்கள் மற்றும் கொட்டாம்பட்டி போலீசார் விரைந்து சென்று விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக சிங்கம்புணரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.