பஸ் மோதி தொழிலாளி பலி

பெரம்பலூரில் இயங்கி வரும் ஒரு தனியார் கல்லூரி பஸ் மாணவர்களை ஏற்ற கொண்டு அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது.

Update: 2019-03-30 22:15 GMT
அரியலூர்,

பெரம்பலூரில் இயங்கி வரும் ஒரு தனியார் கல்லூரி பஸ் மாணவர்களை ஏற்ற கொண்டு அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. அரியலூரை அடுத்த வாரணவாசி அருகே சென்று கொண்டு இருந்த போது, மேலகருப்பூரை சேர்ந்த கூலி தொழிலாளியான கணேசமூர்த்தி (வயது 31) என்பவர் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதியது. இதில் படுகாயம் அடைந்த கணேசமூர்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த அரியலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்