உரிமம் இல்லாமல் துப்பாக்கிகள் வைத்திருந்த 5 பேர் கைது
பெரம்பலூர் போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேரை மறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில் பெரம்பலூர் போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேரை மறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் பீகார் மாநிலத்தை சேர்ந்த தர்மேந்திர குமார், தீபக் (வயது 24), பெரம்பலூர் மாவட்டம் அம்மாபாளையத்தை சேர்ந்த ஜெயசந்திரன் (35), கண்ணதாசன்(32), பெரம்பலூர் இந்திரா நகரை சேர்ந்தவர் சாதிக் அலி(34) என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் சோதனையிட்டனர். அதில் உரிய ஆவணங்களின்றி உரிமம் இல்லாமல் வைத்திருந்த 2 கைத்துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த 5 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.