தூத்துக்குடியில் 2-ந்தேதி அமித்ஷா, எடப்பாடி பழனிசாமி பிரசாரம்: விழா மேடைக்கு பந்தக்கால் நடும் நிகழ்ச்சி
தூத்துக்குடியில் வருகிற 2-ந்தேதி பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பிரசாரம் செய்ய உள்ளனர். இதற்கான விழா மேடை அமைக்க பந்தல்கால் நாட்டும் நிகழ்ச்சி நடந்தது.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் வருகிற 2-ந்தேதி பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பிரசாரம் செய்ய உள்ளனர். இதற்கான விழா மேடை அமைக்க பந்தல்கால் நாட்டும் நிகழ்ச்சி நடந்தது.
எடப்பாடி பழனிசாமி பிரசாரம்
நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் தமிழிசை சவுந்தரராஜனை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்ய வருகிற 2-ந்தேதி பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தூத்துக்குடி வர உள்ளனர்.
பந்தக்கால் நடும் நிகழ்ச்சி
அவர்கள் பங்கேற்கும் விழா மேடை பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று காலையில் தூத்துக்குடி- மதுரை மெயின் ரோட்டில் சங்கபேரி விலக்கு பகுதியில் நடந்தது. முன்னாள் அமைச்சர் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தொடர்ந்து அவர் விழா மேடை பந்தக்கால் நட்டார்.
இந்த நிகழ்ச்சியில் பா.ஜனதா மாவட்ட தலைவர் பாலாஜி, பொறுப்பாளர் முரளி, மாநில அமைப்புசாரா ஓட்டுனர் அணி இணை செயலாளர் பெருமாள்சாமி, முன்னாள் வாரிய தலைவர் அமிர்தகணேசன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் திருப்பாற்கடல், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன், மாநகர பகுதி கழக செயலாளர்கள் பொன்ராஜ், சேவியர், ராமகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் செம்பூர் ராஜநாராயணன், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் டேக் ராஜா, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் ஜோதிமணி, மகளிர் அணி செரினா பாக்கியராஜ், மாவட்ட அரசு வக்கீல்கள் சுகந்தன் ஆதித்தன், கோமதி மணிகண்டன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.