கிருஷ்ணரை பற்றி இழிவாக பேசுவதா? கி.வீரமணியை கண்டித்து ஆர்ப்பாட்டம்
பொள்ளாச்சியில் நடந்த பாலியல் விவகாரத்தில் இந்து கடவுள் கிருஷ்ணரை தொடர்புபடுத்தி, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி சமீபத்தில் சில கருத்துகளை தெரிவித்திருந்தார்.;
சென்னை,
இதனை கண்டித்து இந்துக்கள் பாதுகாப்பு படை சார்பில் சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பின் தலைவர் சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் எஸ்.கே.சாமி தலைமை தாங்கினார். இதில் வேத உபன்யாசகர் அனந்த பத்மநாப சாமி, பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் தி.தேவநாதன் யாதவ், இந்து முன்னணி மாநகர தலைவர் ஏ.டி.இளங்கோவன் உள்பட பலர் பங்கேற்றனர்.
அப்போது இல.கணேசன் நிருபர்களிடம் கூறுகையில், ‘பொள்ளாச்சி விவகாரத்தில் கிருஷ்ணரை தொடர்புபடுத்தி கருத்துகள் தெரிவித்தது மிகப்பெரிய தவறு. ஒரு கட்சியின் தலைவராக இருந்துகொண்டு மக்கள் மனது புண்படும்படியான கருத்துகளை தெரிவிப்பது நல்லதல்ல. கி.வீரமணி, தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும்’ என்றார்.
‘கி.வீரமணியை கைது செய்யவேண்டும், திராவிடர் கழகத்தை தடை செய்யவேண்டும்’ உள்ளிட்ட கோஷங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் எழுப்பினர்.