தேர்தல் பிரசாரத்தில் தகராறு: 2 பேர் கத்தியால் குத்த முயன்றதாக காங்கிரஸ் பெண் வேட்பாளர் பரபரப்பு புகார்
தேர்தல் பிரசாரத்தின்போது 2 பேர் கத்தியால் தாக்க முயன்றதாக கருர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி போலீசில் புகார் செய்தார்.
கரூர்,
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா லிங்கமநாயக்கன்பட்டியில் நேற்று முன்தினம் மாலை, கரூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்கு ஆதரவு திரட்டும் வகையில் தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் வி.செந்தில்பாலாஜி உள்பட தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது காங்கிரஸ் வேட்பாளருக்கு கும்பமரியாதை கொடுத்து மக்கள் வரவேற்றனர்.
அந்த சமயத்தில் அங்கு நின்ற கருங்கல்பட்டியை சேர்ந்த திருமூர்த்தி (வயது 36) என்பவர் திடீரென ஈழப்பிரச்சினையில் தமிழர்களை கொன்று குவித்தவர்களுக்கு ஏன் ஆரத்தி வரவேற்பு? என கூறி கோஷம் எழுப்பினார். இதனை கண்ட அங்கிருந்தவர்கள் சிலர் உடனடியாக ஓடி வந்து அவரை சரமாரியாக அடித்து உதைத்தனர். அப்போது தட்டி கேட்ட மலப்பட்டியை சேர்ந்த பெரியசாமி (26) என்பவரும் அடி விழுந்தது.
இதைக்கண்ட அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், தாக்கப்பட்ட அந்த 2 பேரும் அ.தி.மு.க. ஆதரவாளர்கள் என்பது தெரியவந்தது.
மேலும் செந்தில்பாலாஜி தூண்டுதலின்பேரில் 18 பேர் தன்னை தாக்கியதாக போலீஸ் நிலையத்தில் திருமூர்த்தி புகார் அளித்தார். அதன்பேரில் செந்தில்பாலாஜி, நன்னியூர் ராஜேந்திரன், எம்.எஸ்.மணியன், ரமேஷ்பாபு, சிவா உள்பட 18 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் செந்தில்பாலாஜி, வேட்பாளர் ஜோதிமணி உள்பட தி.மு.க., காங்கிரசார் திரளானோர் அரவக்குறிச்சி போலீஸ் நிலையத்திற்கு திரண்டு வந்தனர்.
அப்போது ஜோதிமணி போலீசில் பரபரப்பான புகார் ஒன்றை அளித்தார். அதில், தான் வாக்கு கேட்க சென்ற இடத்தில் திருமூர்த்தி, பெரியசாமி ஆகிய 2 பேர் பொது இடத்தில் வைத்து தன்னை திட்டி கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார், திருமூர்த்தி, பெரியசாமி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பின்னர் ஜோதிமணி நிருபர்களிடம் கூறுகையில், லிங்கமநாயக்கன்பட்டி காலனியில் ஓட்டு சேகரித்தபோது 2 பேர் பிரச்சினை செய்தனர். அதில் ஒருவர் கத்தியை எடுத்து குத்துமாறு கூறினார். விசாரித்ததில், அவர்கள் திருமூர்த்தி, பெரியசாமி என்பது தெரியவந்தது. கத்தியை பார்த்ததும் மக்கள் பயந்து ஓடினர். கத்தியுடன்தான் அந்த 2 பேரும் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் வெளியூர்க்காரர்கள் என்று தெரிவித்தார்.