நாங்கள் அமைத்துள்ளது வலுவான கூட்டணி: அனைத்து தொகுதிகளிலும் நிச்சயம் வெற்றி பெறுவோம் முதல்-அமைச்சர் பேட்டி
நாங்கள் வலுவான கூட்டணியை அமைத்துள்ளோம். எனவே நடைபெற உள்ள தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
நன்னிலம்,
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று நாகை, திருவாரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நன்னிலத்தில் இருந்து திருவாரூர் சென்று கொண்டு இருந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழியில் பனங்குடி என்ற இடத்தில் பருத்தி வயலில் வேலை செய்து கொண்டு இருந்த விவசாய தொழிலாளர்களை பார்த்ததும் வேனை நிறுத்தச்சொன்னார்.
பின்னர் வேனில் இருந்து இறங்கி வயலுக்கு சென்ற முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விவசாயி துரை என்பவரிடம் கைகுலுக்கி நலம் விசாரித்தார். தொடர்ந்து விவசாயம் எப்படி உள்ளது? தமிழக அரசின் சார்பில் பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்பட்ட பணம் உங்களுக்கு கிடைத்ததா? என்று கேட்டறிந்தார். அதற்கு விவசாயி துரை, விவசாயம் சிறப்பாக இருப்பதாக கூறினார். அங்கு வேலை செய்த பெண் தொழிலாளர்களிடம் நலம் விசாரித்த எடப்பாடி பழனிசாமி, அம்மா அரசின் திட்டங்கள் எல்லாம் உங்களுக்கு கிடைக்கிறதா? என்று கேட்டறிந்தார்.
அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்
பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- உங்களது பிரசார பயணம் எப்படி உள்ளது?
பதில்:- எனது பிரசார பயணம் நன்றாக உள்ளது. எனது பயணத்தின்போது வழி நெடுகிலும் பொதுமக்கள் ஆரவாரத்துடன் என்னை வரவேற்கிறார்கள்.
கேள்வி:- உங்கள் கூட்டணி குறித்து எதிர்கட்சிகள் விமர்சனம் செய்கிறார்களே?
பதில்:- எங்கள் கூட்டணி குறித்து விமர்சனம் செய்வதற்கு ஒன்றும் இல்லை. எங்கள் கூட்டணி வலுவான கூட்டணி. அனைத்து தொகுதிகளிலும் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம்.
கேள்வி:- அ.ம.மு.க. குறித்து...?
பதில்:- அது ஒரு கட்சியே இல்லை. அதைப்பற்றி எதுவும் பேச வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
வருமான வரித்துறை நடவடிக்கை
மேலும் நீட் தேர்வு குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு நீட் தேர்வை ரத்து செய்வது குறித்து மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறோம் என்றும், துரைமுருகன் வீட்டில் வருமான வரி சோதனை குறித்து கேட்டதற்கு, நீங்கள் சொல்லித்தான் அதுகுறித்து எனக்கு தெரிய வருகிறது. அது வருமான வரித்துறையின் நடவடிக்கை என்றார்.
அப்போது அமைச்சர் காமராஜ் உடன் இருந்தார்.