வடலூரில் வாகன சோதனையில் ரூ.55 ஆயிரம் பறிமுதல் பறக்கும் படையினர் நடவடிக்கை

வடலூரில் வாகன சோதனையில் ரூ.55 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

Update: 2019-03-30 22:15 GMT
குறிஞ்சிப்பாடி, 

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும் படை தாசில்தார் முரளி தலைமையிலான அதிகாரிகள் நேற்று வடலூரில் சென்னை-கும்பகோணம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மினிலாரியை அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் மறித்து சோதனை செய்தனர். அதில் ரூ.55 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து காரில் வந்தவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் கருவேப்பிலங்குறிச்சி தேவங்குடி ரோட்டை சேர்ந்த பட்டுசாமி மகன் பன்னீர்செல்வம் என்பதும், வடலூர் சந்தையில் மாடு விற்பனை செய்து பணத்தை கொண்டு வந்ததும் தெரியவந்தது. ஆனால் அதற்கு உரிய ஆவணம் அவரிடம் இல்லை. இதனால் ரூ.55 ஆயிரத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதை குறிஞ்சிப்பாடி தாசில்தார் உதயகுமாரிடம் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்