பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்களை கடுமையாக தண்டிக்கக்கோரி நூதன ஆர்ப்பாட்டம்

பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்களை கடுமையாக தண்டிக்கக்கோரி பொதுமக்கள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-03-29 22:30 GMT
கீழப்பழுவூர், 

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்தை சேர்ந்த கண்டிராதித்தம் மேட்டு தெருவில், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை வழங்கக்கோரி அப்பகுதி மக்கள், குழந்தைகள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய மக்கள் சேவை இயக்க மாநில தலைவர் தங்கசண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். இதில் தங்கசண்முகசுந்தரம் ஒரு தராசை சுமந்து கொண்டு அதில் ஒரு பக்கம் பெண் குழந்தையை அமர வைத்து நீதி கேட்கும் வண்ணம் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தற்போது தமிழகத்தில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் எதிராக பாலியல் வன்கொடுமை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதுபோன்ற சம்பவங் களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டால் மட்டுமே இதுபோன்ற குற்றங்கள் குறையும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள் என பலர் கலந்து கொண்டனர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்