தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் 25 வேட்பாளர்கள் போட்டி

தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் 25 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

Update: 2019-03-29 22:00 GMT
நெல்லை, 

தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் 25 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

நாடாளுமன்ற தேர்தல்

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 18-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19-ந் தேதி தொடங்கியது. 26-ந் தேதியுடன் வேட்பு மனுதாக்கல் முடிவடைந்து, மறுநாள் வேட்புமனு மீதான பரிசீலனை நடந்தது. மனுவை திரும்ப பெற நேற்று கடைசிநாள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

தென்காசி நாடாளுமன்ற தொகுதிக்கு தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிடுகின்ற புதிய தமிழகம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், மக்கள் நீதிமய்யம், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்பட 26 பேர் 36 வேட்பு மனு தாக்கல் செய்து இருந்தனர். வேட்பு மனு பரிசீலனையில் 10 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனால் 26 பேர் மட்டும் களத்தில் உள்ளனர்.

25 பேர் போட்டி

இந்த நிலையில் சுயேச்சை வேட்பாளர் சுரேஷ் தனது வேட்பு மனுவை நேற்று வாபஸ் பெற்றார். இதனால் 25 வேட்பாளர்கள் இந்த தொகுதியில் போட்டியிடுகிறார்கள். தென்காசி தொகுதியில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் விபரம் வருமாறு:-

டாக்டர் கிருஷ்ணசாமி-(அ.தி.மு.க.- இரட்டை இலை), தனுஷ் எம்.குமார் (தி.மு.க.-உதயசூரியன்), சு.பொன்னுத்தாய் (அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்- கிப்ட் பாக்ஸ்), முனீஸ்வரன் (மக்கள் நீதிமய்யம்-டார்ச் லைட்), மதிவாணன் (நாம் தமிழர் கட்சி- கரும்பு விவசாயி), ரவி (ஆண்டி கரெப்சன் டைனமிக் பார்டி-பலாபழம்), சிவ ஜெயபிரகாஷ் (சுயேச்சை-வைரம்), சுந்தரம் (சுயேச்சை-கேக்), சுப்பையா (சுயேச்சை-தரை விரிப்பு), சூரியரகுபதி (சுயேச்சை-கணினி), தங்கராஜ் (சுயேச்சை- கிரிக்கெட் மட்டை), தாமரை செல்வன் (சுயேச்சை-கரும்பலகை), பழனிச்சாமி (சுயேச்சை-விசில்), கோ.பொன்னுத்தாய் (சுயேச்சை-டி.வி.), செல்வகுமார் (சுயேச்சை-பேனா நிப்), தனுஷ்கோடி (சுயேச்சை- குக்கர்), ரா.பொன்னுச்சாமி (சுயேச்சை-தொப்பி), ம.பொன்னுத்தாய் (சுயேச்சை-காலுறைகள்), மா.பொன்னுத்தாய் (சுயேச்சை-பெட்டி), முத்துமுருகன் (சுயேச்சை-ஈட்டி எறிதல்), வைரவன் (சுயேச்சை- வாளி), பரதராஜ் (சுயேச்சை- பலூன்), பெருமாள்சாமி (சுயேச்சை- கப்பல்), மூர்த்தி (சுயேச்சை-பானை), தீபன் அருண் (சுயேச்சை-மோதிரம்).

மேலும் செய்திகள்