ஓசூர் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு
ஓசூர் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் பொது பார்வையாளர் கல்யாண்சந்த் ஷமன் ஆய்வு செய்தார்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான தேர்தல் பொது பார்வையாளர் கல்யாண்சந்த் ஷமன் ஓசூர் ஒன்றியத்திற்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகளை நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதையொட்டி அவர், எஸ்.முதுகானப்பள்ளி, பஞ்சாசிபுரம், மாசிநாயக்கனப்பள்ளி, நாக்கொண்டப்பள்ளி ஆகிய நடுநிலைப்பள்ளிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங் களில் அடிப்படை வசதிகளை ஆய்வு செய்தார்.
அதன்படி வாக்குச்சாவடி மையத்தில் மின்சார வசதி, மின்விளக்கு, மின்விசிறி வசதிகள், மாற்றுத்திறனாளிகள் எளிதாக வாக்குச்சாவடிக்குள் சென்று வாக்களிக்க சாய்வு தளம், சுகாதார வளாக வசதிகள் மற்றும் குடிநீர் வசதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்்ந்து 100 சதவீதம் வாக்களிப்பதின் அவசியம் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைத்தார்.
முன்னதாக ஓசூர் சட்டமன்ற இடைத்தேர்தல் பணிக் காக நியமிக்கப்பட்டுள்ள பறக்கும் படையினர் மத்திகிரி பிரிவு சாலையில் வாகன சோதனை பணிகளையும், அந்திவாடி பிரிவு சாலையில் வாகன சோதனை பணிகளையும், பூனப்பள்ளியில் காவல் சோதனை சாவடியில் வாகனங்கள் சோதனை பணிகளையும் தேர்தல் பொது பார்வையாளர் கல்யாண்சந்த் ஷமன் பார்வையிட்டார்.