திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியில் தயார் நிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அதிகாரிகள் ஆய்வு

திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியில் தயார் நிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. இவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Update: 2019-03-29 23:00 GMT
பொன்னேரி,

திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, மாதவரம், திருவள்ளூர், ஆவடி, பூந்தமல்லி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளது. இதில் பொன்னேரி (தனி) தொகுதியின் 310 வாக்குப்பதிவு மையங்களில் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு ஏதுவாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்ட உள்ளது.

பொன்னேரி தொகுதிக்கான 310 வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பொன்னேரியில் உள்ள தமிழ்நாடு மீன்வள கல்லூரியில் போலீஸ் பாதுகாப்புடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு மையங்களில் எந்திரங்கள் பழுது ஏற்பட்டால் உடனடி தேவைக்காக 53 எந்திரங்கள் கூடுதலாக பெறப்பட்டுள்ளது. பொன்னேரி (தனி) சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் ஆர்.டி.ஓ.வுமான நந்தகுமார் வாக்குப்பதிவு எந்திரங்களை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அப்போது தாசில்தார் புகழேந்தி, துணை தாசில்தார்கள் செல்வகுமார், மதிவாணன், வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்