நெல்லை- தென்காசி நாடாளுமன்ற தொகுதி இறுதி வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியாகிறது

நெல்லை, தென்காசி நாடாளுமன்ற தொகுதி இறுதி வேட்பாளர்கள் பட்டியல் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிடப்படுகிறது.

Update: 2019-03-28 21:45 GMT
நெல்லை, 

நெல்லை, தென்காசி நாடாளுமன்ற தொகுதி இறுதி வேட்பாளர்கள் பட்டியல் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிடப்படுகிறது.

நெல்லை தொகுதி

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந் தேதி நடக்கிறது. நெல்லை, மாவட்டத்தில் நெல்லை, தென்காசி (தனி) என 2 தொகுதிகள் உள்ளன. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19-ந் தேதி தொடங்கி, 26-ந் தேதி நிறைவடைந்தது. நேற்று முன்தினம் வேட்பு மனு மீது பரிசீலனை நடந்தது. நேற்று காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மனுக்கள் திரும்ப பெறப்பட்டது. இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 3 மணி வரை மனுக்களை திரும்ப பெறலாம்.

நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க., தி.மு.க., அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்கள் உள்ளிட்ட 49 பேர் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தனர். இதில் 27 பேரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. மாற்று வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் உள்பட 22 பேரின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போது நெல்லை தொகுதியில் 27 பேர் வேட்பாளர்களாக உள்ளனர். நேற்று ஒருவர் கூட மனுவை வாபஸ் பெற வில்லை. இன்று மாலை இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படுகிறது.

தென்காசி தொகுதி

அதேபோல் தென்காசி தொகுதியில் தி.மு.க., புதிய தமிழகம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி உள்பட 36 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில் 26 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்று கொள்ளப்பட்டன. 10 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. தற்போது 26 பேர் வேட்பாளர்களாக உள்ளனர். இந்த தொகுதியிலும் நேற்று மனுக்களை யாரும் வாபஸ் பெறவில்லை. இன்று மாலை இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படுகிறது.

மேலும் செய்திகள்