விளாத்திகுளத்தில் வாகன சோதனையில் ரூ.4 லட்சம் பறிமுதல்

விளாத்திகுளத்தில் வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.4 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2019-03-28 21:30 GMT
விளாத்திகுளம், 

விளாத்திகுளத்தில் வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.4 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

வாகன சோதனை

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்குவதை தடை செய்யும் வகையில், தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர், பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த நிலையில் விளாத்திகுளம் யூனியன் என்ஜினீயர் படி பீவி, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் உள்ளிட்ட நிலையான கண்காணிப்பு குழுவினர் நேற்று மதியம் விளாத்திகுளம் பஸ் நிலையம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக ஸ்கூட்டரில் வந்தவரை அதிகாரிகள் வழிமறித்து விசாரித்தனர். அப்போது அவரது ஸ்கூட்டரின் இருக்கைக்கு அடியில் உள்ள பெட்டியில், உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.4 லட்சத்தை கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சிமெண்டு கடை உரிமையாளர்

அதிகாரிகளின் விசாரணையில், ஸ்கூட்டரில் வந்தவர் விளாத்திகுளம் காமராஜர் நகர் முதலாவது தெருவைச் சேர்ந்த சிமெண்டு, பெயிண்டு கடை உரிமையாளரான சண்முகசுந்தரம் என்பதும், இவர் நிலம் வாங்குவதற்காக பணத்தை கொண்டு சென்றதாகவும் தெரிவித்தார்.

பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிச்சந்திரனிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர். பின்னர் அந்த பணம், விளாத்திகுளம் கிளை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்