கோவையில் சிறு, குறு தொழில் நிறுவனங்களை பாதுகாக்க ஜி.எஸ்.டி.வரியை ரத்து செய்ய முயற்சி செய்வேன் - தி.மு.க. கூட்டணி வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் வாக்குறுதி

கோவையில் சிறு, குறு தொழில் நிறுவனங்களை பாதுகாக்க ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய முயற்சி செய்வேன் என்று தி.மு.க. கூட்டணி வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் வாக்குறுதி அளித்தார்.

Update: 2019-03-27 22:59 GMT
சரவணம்பட்டி,

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கோவை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் கவுண்டம்பாளையம் தொகுதி செயல் வீரர்கள் கூட்டம் கோவில்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கோவை வடக்கு மாவட்ட சரவணம்பட்டி தி.மு.க. பகுதி செயலாளரும், கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளருமான பையாக்கவுண்டர் தலைமை தாங்கினார்.

தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் சிஆர்.ராமச்சந்திரன், கோவை நாடாளுமன்ற காங்கிரஸ் பொறுப்பாளர் நவீன்குமார், ம.தி.மு.க மாவட்ட செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுமுகம், கொ.ம.தே.க. மாவட்ட செயலாளர் குழந்தைவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சரவணம்பட்டி தி.மு.க. பகுதி செயலாளர் பையாக்கவுண்டர், கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. கூட்டணி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜனை அறிமுகப்படுத்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பி.ஆர்.நடராஜன் கடந்த முறை எம்.பி.யாக இருந்தபோது நான் காளப்பட்டி பேரூராட்சி தலைவராக இருந்தேன். அப்போது பேரூராட்சிக்கு நிதி கேட்டபோது மாற்று கட்சியாக இருந்த போதும் 2 முறை நிதியினை பெற்று தந்தார். கோவை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 தொகுதிகளில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் வேட்பாளர் பி.ஆர்.நடராஜனுக்கு அதிக வாக்குகளை பெற்றுத்தருவோம் என்று சபதம் ஏற்று உறுதி கூறுகிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதனை தொடர்ந்து வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் பேசும்போது கூறியதாவது:-

கடந்த முறை நான் போட்டியிட்ட போது எனக்கு போட்டி வேட்பாளராக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈஸ்வரன் வாக்குகளை பிரித்ததால் நான் வெற்றி பெற்றேன். இந்த முறை எங்களோடு இணைந்து வாக்குகளை தருவதால் வெற்றி பெறுவேன். நான் வெற்றி பெற்றால் கோவையில் உள்ள 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு, தொழில் நிறுவனங்கள் ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் பாதிப்படைந்துள்ளன. ஆகவே சிறு, குறு, தொழில் நிறுவனங்களை பாதுகாக்க ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய முயற்சி செய்வேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் தி.மு.க. வடக்கு மாவட்ட நிர்வாகிகள் மணி (எ) விஜயகுமார், சுப்பையன், ராசு, சரவணம்பட்டி கோபாலகிருஷ்ணன், ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் குருசாமி, கொ.ம.தே.க. ஒன்றிய செயலாளர் சுதாகர் உள்பட தி.மு.க. காங்கிரஸ், கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், கொ.ம.தே.க ஆகிய கட்சி நிர்வாகிகள் கலந்துகொண் டனர். 

மேலும் செய்திகள்