மாங்காட்டில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

மாங்காட்டில் இளம்பெண் தூக்குப்போட்டு தறகொலை செய்துகொண்டார்.

Update: 2019-03-27 23:00 GMT

பூந்தமல்லி,

மாங்காடு, தெற்கு மலையம்பாக்கம், பாலாஜி நகரை சேர்ந்தவர் சவுந்திரபாண்டியன் (வயது 29). ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பிரியங்கா (25). இவர்களுக்கு சசிஸ்ரீ (4) என்ற மகள் உள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து இரவு வீட்டிற்கு வந்த சவுந்திரபாண்டியன் தனது மனைவியிடம் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது பிரியங்காவுக்கு செல்போனில் அழைப்பு வந்தது. இதையடுத்து அவர் செல்போனில் பேசிவிட்டு வந்தார்.

அப்போது யார் என்று கேட்டபோது குழந்தையை பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று கூறி பள்ளியில் இருந்து அழைப்பு வந்தது. அவர்களுடன் பேசிவிட்டு வந்ததாக கூறினார். மேலும் தன்னை சந்தேகப்படுகிறீர்களா? என தனது கணவரிடம் பிரியங்கா கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து சவுந்திரபாண்டியன் காய்கறி வாங்க கடைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது பிரியங்கா தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் காணப்பட்டார். அதிர்ச்சி அடைந்த அவர் அலறி கூச்சலிட்டார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்துவிட்டு மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிரியங்கா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். மேலும் திருமணமாகி 5 ஆண்டுகள் ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்