வானவில் : காரும் தமிழ் திரைப்படமும்...

படிக்காதவன் திரைப்படம் வந்து 34 ஆண்டுகள் ஆகிய போதிலும் இன்னமும் நம் மனதை விட்டு நீங்கவில்லை.

Update: 2019-03-27 12:57 GMT
படிக்காதவன்

படிக்காதவன் படத்தில் ரஜினிகாந்த் டாக்ஸி டிரைவர் வேடத்தில் நடித்திருப்பார். அவர் உயிருக்கு உயிராக நேசிக்கும் தன் காரை லட்சுமி என்று செல்லமாக பெயரிட்டு அழைப்பார். அது ஒரு பியட் காராகும். இத்தாலி நாட்டின் மிகப்பெரிய நிறுவனமான பியட் ஆட்டோமொபைல் நிறுவனம் தயாரித்த கார் அது. அந்நாட்களில் ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் போர்ட் ஆகிய கார் கம்பெனிகளுக்கு பின்னே மூன்றாவது இடத்தை வெகு நாட்களாக பியட் நிறுவனம் தக்க வைத்திருந்தது. 1970-களிலேயே ஒரு லட்சம் பேருக்கு மேலாக வேலை வாய்ப்பளித்த பெருமை பியட் நிறுவனத்திற்கு உண்டு. பியட் கார்கள் காற்றை மாசுபடுத்தும் கரியமில வாயுவை குறைந்த அளவில் வெளியிடும். இதற்காக பல விருதுகளையும் பியட் நிறுவனம் வென்று உள்ளது. அப்போது மட்டுமின்றி இன்றும் லேட்டஸ்டாக வந்திருக்கும் பியட் 500 கார் வரை இந்த கார்களுக்கான மவுசு இன்னும் குறையவில்லை.

மேலும் செய்திகள்