வானவில் : சாம்சங்கின் ‘ட்ரிபிள் இன்வெர்டர்’
மின்னணு பொருள் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் கொரியாவைச் சேர்ந்த சாம்சங் நிறுவனம் இந்த கோடைக் காலத்தை சமாளிக்க மேம்பட்ட தொழில்நுட்பம் கொண்ட ஏ.சி.க்களை அறிமுகம் செய்துள்ளது. இதில் ‘ட்ரிபிள் இன்வெர்டர்’ என்ற புதிய தொழில்நுட்பம் புகுத்தப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகள் அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. மிக விரைவாக குளிர் தன்மை நிலவச் செய்யும் அதேசமயம் குறைந்த அளவிலான மின்சாரம் மட்டுமே இதற்குத் தேவைப்படும். இதில் கன்வெர்டெபிள் மோட் என்ற புதிய வசதி உள்ளது. இதை தேர்வு செய்தால் அறையில் உள்ள நபர்களின் எண்ணிக்கைக்கேற்ப குளிர்ச்சி தன்மையை விரைவாகப் பரவச் செய்வதோடு அதை தொடர்ந்து நிலைத்திருக்கவும் உதவும்.
இப்புதிய மாடலுக்கு 3 விதமான சலுகைகள் அளிக்கப்படுகின்றன. இதன் கம்ப்ரஸருக்கு 10 ஆண்டுகள், டியூராபின் கன்டென்ஸருக்கு 5 ஆண்டுகள், பி.சி.பி. கண்ட்ரோலர் யூனிட்டுக்கு 2 ஆண்டுகள் உத்திரவாதம் அளிக்கப்படுகிறது.வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் விரைவாக கூல் ஆகும் வசதி, மின் சிக்கனம், நீடித்து உழைக்கும் தன்மை, மேம்பட்ட நவீன தொழில்நுட்பம், அழகிய டிசைன் ஆகிய அனைத்து அம்சங்களையும் கொண்டதாக இது விளங்குகிறது. 5 ஆண்டுகளுக்கு குளிர் வாயுவை இலவசமாக வாடிக்கையாளர்களுக்கு நிரப்பித் தரப்படும் என்றும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் உள்ள கன்வெர்டிபிள் மோட் எனப்படும் தொழில்நுட்பமானது, நீங்கள் 2 டன் ஏ.சி.யை அறையில் நிறுவியிருந்தாலும், அறையில் நீங்கள் மட்டுமே இருப்பதாக இருந்தால் இது 0.8 டன் போல செயல்படும்.
இதனால் குறைவாக மின்சாரம் செலவாகும். வாடிக்கையாளர்களுக்கு 10 சதவீத கேஷ் பேக் வசதியும் அளிக்கப்படுகிறது. ஆக்சிஸ் வங்கி, சிட்டி வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ஹெச்.டி.எப்.சி. வங்கி உள்ளிட்ட வங்கிகளின் கடன் அட்டைகளைப் பயன்படுத்துவோருக்கு 10 சதவீத கேஷ் பேக் சலுகை அளிக்கப்படும் என்று சாம்சங் தெரிவித்துள்ளது. இதன் விலை ரூ.45,400 முதல் ரூ.75 ஆயிரம் வரை. இந்த ஏ.சி.க்கள் டன் அளவுக்கேற்ப 3 நட்சத்திரக் குறியீடு மற்றும் 5 நட்சத்திரக் குறியீட்டைப் பெற்றுள்ளன.