நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க.-தி.மு.க. வேட்பாளர்கள் உள்பட 39 பேர் வேட்பு மனுதாக்கல் தென்காசியில் 34 பேர் மனுதாக்கல்

நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க.-தி.மு.க. வேட்பாளர்கள் உள்பட 39 பேர் வேட்பு மனுதாக்கல் செய்து உள்ளனர். தென்காசி தொகுதியில் 34 பேர் மனு தாக்கல் செய்து உள்ளனர்.

Update: 2019-03-26 22:00 GMT
நெல்லை, 

நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க.-தி.மு.க. வேட்பாளர்கள் உள்பட 39 பேர் வேட்பு மனுதாக்கல் செய்து உள்ளனர். தென்காசி தொகுதியில் 34 பேர் மனு தாக்கல் செய்து உள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தல்

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19-ந் தேதி தொடங்கியது. நேற்று மாலை 3 மணியுடன் வேட்பு மனுதாக்கல் முடிவடைந்தது. இன்று (புதன்கிழமை) வேட்புமனு மீதான பரிசீலனை நடக்கிறது. மனுவை திரும்ப பெற நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) கடைசிநாள் ஆகும்.

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நெல்லை நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம் இருந்தது. இதனால் நெல்லை நாடாளுமன்ற தொகுதிக்கு தேர்தல் நடத்தும் அலுவலரான கலெக்டர் ஷில்பாவிடம் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர். நெல்லை தொகுதிக்கு நேற்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், மக்கள் நீதிமய்யம் வேட்பாளர்கள் உள்பட சுயேச்சை வேட்பாளர்களாக மகாராஜன், மனோகரன், ராமமூர்த்தி, ரத்தினசிகாமணி, ராமசாமி, ராஜூ, பேச்சிமுத்து, சுந்தர்ராஜ், மகேசுவரி, முருகேசன், ராஜ்குமார், கார்த்தீசன், மகாராஜா, கமலக்கண்ணன், கணேசன், ராமகிருஷ்ணன், விக்சன்டேனியல், பால்சாலமோன் பாண்டியன், பகுஜன் சமாஜ் கட்சி இசக்கிம்மாள் ஆகிய 22 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். மதியம் 2.50 மணிக்கு பிறகு வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. டோக்கன் பெற்றவர்கள் கடைசியாக வேட்பு மனு தாக்கல் செய்ய மாலை 3.30 மணி வரை ஆனது.

39 பேர் வேட்பு மனு தாக்கல்

நெல்லை தொகுதிக்கு அ.தி.மு.க.- தி.மு.க., அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்பட 39 பேர் வேட்பு மனுதாக்கல் செய்து உள்ளனர். வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள் விவரம் வருமாறு:-

மனோஜ் பாண்டியன் (அ.தி.மு.க.), எஸ்.டி.காமராஜ் (அ.தி.மு.க. மாற்று), ஞானதிரவியம் (தி.மு.க.),சேவியர் செல்வராஜா (தி.மு.க. மாற்று), மைக்கேல் ராயப்பன் (அ.ம.மு.க.), செரப்பின்ராய் சேவியர்(அ.ம.மு.க. மாற்று), சத்யா (நாம் தமிழர் கட்சி) மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் உள்பட 39 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர்.

தென்காசி தொகுதி

தென்காசி நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலரான மாவட்ட வருவாய் அலுவலரிடமும், தென்காசி உதவி கலெக்டரிடமும் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. தென்காசி தொகுதிக்கு நேற்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், மக்கள் நீதிமய்யம் வேட்பாளர்கள், தி.மு.க. மாற்று வேட்பாளர் இந்திராணி உள்பட சுயேச்சை வேட்பாளர்களாக தாமரை செல்வன், ரவி, பாரதராஜ், மூர்த்தி, தங்கராஜ், முத்துமுருகன், சுப்பையா, செல்வகுமார், அமல்ராஜ், வைரவன், சூரியரகுபதி, சுரேஷ், பெருமாள்சாமி, ராஜ், தீபன், சுந்தரம், தனுஷ்கோடி, எஸ்.பொன்னுத்தாய், மா.பொன்னுத்தாய் ஆகிய 26 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

தென்காசி தொகுதிக்கு அ.தி.மு.க., தி.மு.க., அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்பட 34 பேர் வேட்பு மனுதாக்கல் செய்து உள்ளனர். வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள் விவரம் வருமாறு:-

தனுஷ்குமார் (தி.மு.க.), இந்திராணி (தி.மு.க. மாற்று), டாக்டர் கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்), ஷியாம் (புதிய தமிழகம் மாற்று), பொன்னுத்தாய் (அ.ம.மு.க.), சுமதி (அ.ம.மு.க. மாற்று) மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் உள்பட 34 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர்.

போலீஸ் பாதுகாப்பு

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வேட்பு மனு நடந்ததையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கலெக்டர் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் கோடுகள் போடப்பட்டு உள்ளது. அந்த இடத்திலேயே போலீசார் பொதுமக்களை தடுத்து நிறுத்தி, அவர்களிடம் சோதனை நடத்திய பிறகுதான் உள்ளே செல்ல அனுமதித்தனர்.

மேலும் செய்திகள்