மார்த்தாண்டம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் பலி
மார்த்தாண்டம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார். மேலும், 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
குழித்துறை,
மார்த்தாண்டம் அருகே காட்டாத்துறையை சேர்ந்தவர் சுனில் ராஜ் (வயது 32), இன்னும் திருமணமாகவில்லை. இவரது நண்பர் சாஜின் (29). இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் மார்த்தாண்டம் சென்றுவிட்டு காட்டாத்துறை நோக்கி புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை சாஜின் ஓட்டி சென்றார். சுனில்ராஜ் பின்னால் அமர்ந்திருந்தார்.
பமமம் பகுதியில் சென்ற போது எதிரே கருங்கல் பகுதியை சேர்ந்த சாம்ராஜ் என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். எதிர்பாராத விதமாக இரண்டு மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. அவற்றில் பயணம் செய்த 3 பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.
இதைப்பார்த்த அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் விரைந்து வந்து, 3பேரையும் மீட்டு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர். சுனில் ராஜ் நாகர்கோவில் அருகே உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியிலும், சாஜின் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியிலும், சாம்ராஜ் குழித்துறை அரசு ஆஸ்பத்திரியிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். ஆனால், சிகிச்சை பலனின்றி சுனில்ராஜ் பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.